மதசார்ப்பற்ற இந்தியாவில் உச்ச நீதிமன்றத்தின் முக்கியமான தீர்ப்பு!!

சமீபத்திய ஆண்டுகளில் சிறுபான்மையினர் மீது தாக்குதல், அவர்களின் உரிமை பறிப்பு போன்ற சம்பவங்களும் அதிகரித்துள்ளன என்பதும் வேதனையே.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 9, 2019, 01:36 PM IST
மதசார்ப்பற்ற இந்தியாவில் உச்ச நீதிமன்றத்தின் முக்கியமான தீர்ப்பு!! title=

புதுடெல்லி: இந்தியாவின் புனிதத் தளத் என இந்துக்கள் நம்பும் மூன்று ஏக்கருக்கும் குறைவான சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டுமானத்திற்காக இந்து குழுவிடம் ஒப்படைக்கப்படும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் இன்று (சனிக்கிழமை) ஒருமனதாக தீர்ப்பளித்தது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலமான 2.77 ஏக்கர் எங்களுக்கு தான் சொந்தம் என இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் உரிமை கோரினார்கள். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி என்ற ஊரில் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் பாபர் மசூதி, 1992 ஆம் ஆண்டு வலதுசாரி கும்பல்களால் இடிக்கப்பட்டது. 

ஆனால் அந்த இடத்தில் ராமர் கடவுளுக்கு இந்துக்கள் கோவில் கட்டலாம் என்று இந்தியாவின் உயர் நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது, அதே நேரத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு நகரத்தில் 5 ஏக்கர் நிலத்தை தனித்தனியாக வழங்கவும் மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

இது இந்தியாவில் அரசியல் ரீதியாக உருவெடுத்த மிகப்பெரிய நில தகராறுகளில் ஒன்றாகும். இது சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் ஒரு சிக்கலான மற்றும் முழுமையான வழக்கு ஆகும்.

அயோத்திய தீர்ப்பு வழங்குவதற்கு முன்பு, பண்டைய நூல்கள், முகலாயப் பேரரசரால் எழுதப்பட்ட 500 ஆண்டுகள் பழமையான நாட்குறிப்பு, இடைக்கால வணிகர்களிடமிருந்து பயணக் குறிப்புகள், காலனித்துவ கால ஆய்வுகள் மற்றும் தொல்பொருள் பதிவுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளுமாறு உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

1992-ல் இந்து ஆதரவாளர்களால் பாபர் மஸ்ஜித் மசூதி அழிக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவில் காணப்பட்ட மிக மோசமான வன்முறைகளில் இதுவும் ஒன்று. நாடு தழுவிய இந்த கலவரத்தில் 2,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்து மற்றும் முஸ்லீம் கும்பல்களின் தொடர்ச்சியான பழிவாங்கும் தாக்குதல்களில் டஜன் கணக்கான கோயில்கள் மற்றும் மசூதிகள் குறிவைக்கப்பட்டன.

அப்போதிருந்து, பாபர் மசூதி இடிக்கப்பட்ட தளத்தில் ஒரு இந்து கோவிலைக் கட்டுவதற்கான கோரிக்கைகள் எழுத் தொடங்கின. இந்த கோரிக்கை நீண்ட காலமாக இந்துத்துவா கொள்கைகள் கடுமையாக பின்பற்றுவர்களால் வைக்கப்பட்ட ஒரு கோரிக்கையாகும். ஆனால் மதசார்ப்பற்ற இந்தியாவில் இதுபோன்ற கோரிக்கைகள் வன்முறைகளின் வெடிப்பிற்கு வழிவகுக்கும் என்று கவலைப்படுகிறார்கள். ஆனால் மத்திய அரசு மேற்கொண்ட சரியான நடவடிக்கை மூலம், இன்று சர்ச்சைக்குரிய புனித தளத்தைக் குறித்து தீர்ப்பு வழங்கியது. ஆனால் அதேவேலையில் மறுபுறத்தில் சமீபத்திய ஆண்டுகளில் சிறுபான்மையினர் மீது தாக்குதல், அவர்களின் உரிமை பறிப்பு போன்ற சம்பவங்களும் அதிகரித்துள்ளன என்பதும் வேதனையே.

Trending News