தெலங்கான ராஷ்டிரிய சமித்தி தலைவர் சந்திரசேகர ராவ் தான் போட்டியிட்ட கஜ்வெல் தொகுதியில் 51,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்
TRS President and Telangana caretaker Chief Minister K Chandrashekhar Rao wins from Gajwel constituency by over 50,000 votes. #TelanganaElections2018 (file pic) pic.twitter.com/UXP5UYOrnd
— ANI (@ANI) December 11, 2018
தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி உள்ள சட்டசபை தேர்தலில் முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. சத்தீஷ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
தென் இந்தியாவை பொருத்த வரை 119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா சட்டசபை தேர்தலில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கான ராஷ்டிரிய சமித்தி கட்சி அதிக இடங்களை பெற்று முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சி உள்ளது. காங்கிரஸ் 99 இடங்களிலும், டிடிபி கட்சி 13 இடங்களிலும் டிஜிஎஸ் கட்சி 8 இடங்களிலும் சிபிஐ கட்சி மூன்று இடங்களிலும் போட்டியிட்டடது.
119 சட்டசபை தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் ஆட்சி அமைக்க 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தற்போதைய நிலவரபப்டி, தெலுங்கான ராஷ்டிரிய சமித்தி கட்சி 90 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 20 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் மற்றும் மற்றவர்கள் 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர்.
தெலுங்கான ராஷ்டிரிய சமித்தி கட்சி கூட்டணி பெரும்பான்மையை விட அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருவதால், தெலுங்கானா மாநிலத்தில், மீண்டும் சந்திர சேகர ராவ் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புள்ளது. நாளை அனைத்து எம்எல்ஏ-க்கள் ஐதராபாத்துக்கு வரும்படி ராஷ்டிரிய சமித்தி கட்சி (டிஆர்எஸ்) சார்பில் அழைப்பு விடுத்துள்ளது.
இந்தநிலையில், நாளை தெலுங்கான மாநிலத்தின் முதல்வராக மீண்டும் சந்திரசேகர ராவ் பதவியேற்க உள்ளார் என தகவல்கள் வந்துள்ளது.