லிவ்விங் டுகெதர் ஜோடிகள் நீதிமன்றத்தை அணுக முடியாது!சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

லிவ்விங் டுகெதர் ஜோடிகள் நீதிமன்றத்தை அணுக முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 5, 2021, 03:56 PM IST
  • லிவ்விங் டுகெதர் ஜோடிகள் விவகாரத்தில் நீதிமன்றம் மைல்கல் தீர்ப்பு
  • லிவிங் டுகெதர் ஜோடிக்கு நீதிமன்றத்தை அணுக உரிமை இல்லை
  • சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
லிவ்விங் டுகெதர் ஜோடிகள் நீதிமன்றத்தை அணுக முடியாது!சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி! title=

சென்னை: லிவிங் டுகெதர் தொடர்பான விஷயத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. திருமணம் செய்துக் கொள்ளாமல் இணைந்து வாழும் ஜோடிகள் குடும்ப நல நீதிமன்றங்களில் வழக்கு தொடர சட்டப்பூர்வ உரிமையில்லை என்று நீதிபதி தெளிவுபடுத்தினார்.

கல்யாணம் செய்துக் கொள்ளாமல் ஜோசப் பேபி என்பவருடன் இணைந்து வாழ்ந்து வந்த கலைச்செல்வி என்ற பெண் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

தனது இணையரான ஜோசப் பேபியுடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி கலைச்செல்வி வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவர்கள் (Living Together)  குடும்ப நல நீதிமன்றங்களில் வழக்கு தொடர சட்டப்பூர்வ உரிமையில்லை என்று தெரிவித்துள்ளது. 

சட்டப்படி திருமணம் செய்து வாழ்ந்து வருபவர்கள் மட்டுமே, சட்ட உரிமைகளைப் பெறுவதற்காக குடும்பநல நீதிமன்றங்களை அணுக முடியும். சட்டப்படி திருமணம் செய்துக் கொள்ளாமல் இணைந்து வாழ்வது அவரவர் தனியுரிமை என்னும் பட்சத்தில், ஒன்றாக இணைந்து வாழ்ந்ததன் அடிப்படையில் மட்டுமே எப்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ALSO READ | வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திருமணம்- டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்னதாக, சில ஆண்டுகளுக்கு திருமணம் செய்து கொள்ளாமல் ஆண், பெண் சேர்ந்து வாழ உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பு லிவிங் டுகெதர் உறவு தொடர்பான ஒரு மைல்கல் தீர்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.  

குழந்தை திருமணங்களைத் தடுக்கும் வகையில் திருமனத்திற்கான வயது வரம்பை அரசு நிர்ணயித்துள்ளது. இளைஞர்களுக்கு திருமண வயது 21-ஆகவும், பெண்களுக்கு திருமண வயதானது 18 ஆகும். 

கேரள மாநிலத்தை சேர்ந்த 20 வயதான நந்தகுமார் என்ற இளைஞரும், 20 வயதான துஷாரா என்ற பெண்ணும் திருமணம் செய்து கொண்டனர். துஷாரா திருமண வயதை எட்டியிருந்தாலும், நந்தகுமார் அரசு நிர்ணயித்த திருமண வயது எட்டாதவர். 

இந்த திருமணத்தை எதிர்த்த துஷாராவின் தந்தை கேரள உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், திருமணம் செல்லாது என்று அறிவித்த கேரள உயர்நீதிமன்றம், துஷார, தனது தந்தையுடன் செல்ல வேண்டும் என உத்தரவிட்டது. 

ALSO READ | பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள்

இந்த உத்தரவை எதிர்த்த நந்தகுமார்  உச்ச நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிமன்ற அமர்வு, வயது வந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்திருந்தது. 

நந்தகுமாரும், துஷாராவும் ‘மேஜர்’ வயதை எட்டியவர்கள். திருமணம் செய்து கொள்வதற்கான வயதை எட்டாவிட்டாலும் கூட திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்ற சட்ட அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியது.

எனவே, துஷாராவை தந்தையுடன் செல்ல அறிவுறுத்திய கேரள உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டது. யாருடன் சேர்ந்து வாழ்வது என்று முடிவு செய்யும் உரிமை, துஷாராவுக்கு இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, லிவிங் டுகெதர் தொடர்பான ஒரு மைல்கல்லாக இருந்தது.

அதேபோல, திருமணம் செய்யாமல், இரு மனங்கள் ஒத்து வாழ்வதற்கு தடையில்லை என்றாலும், அதன் அடிப்படையில் குடும்பநல நீதிமன்றங்களை அணுக முடியாது என்று இன்று சென்னை நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பும் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் ஒரு மைல்கல் தீர்ப்பாக இருக்கும்.

Also Read | தனுஷ் மேல் சட்ட நடவடிக்கை - நீதிமன்றம் உத்தரவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News