பிச்சைக்காரருக்கு 24ஆண்டுகளுக்குப் பிறகு வந்த ஆசிரியர் அரசுப்பணி - எப்படி கிடைத்தது ?

ஆந்திராவில் பிச்சைக்காரருக்கு 24ஆண்டுகளுக்கு பிறகு வந்த ஆசிரியர் அரசுப்பணி கிடைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Gowtham Natarajan | Last Updated : Jun 22, 2022, 11:07 AM IST
  • 1996ல் எழுதிய தேர்வு
  • தற்போது வந்த பணி ஆணை
  • நெகிழ்ச்சியான சம்பவம்
பிச்சைக்காரருக்கு 24ஆண்டுகளுக்குப் பிறகு வந்த ஆசிரியர் அரசுப்பணி - எப்படி கிடைத்தது ? title=

ஆந்திரா மாநிலம் பாத்தப்பட்டனம் அருகே உள்ள பெத்தசேதி கிராமத்தைச் சேர்ந்தவர் 55 வயதான கேதாஸ்வர ராவ். சிறுவயதில் பெற்றோரை இழந்த இவர், உடன்பிறந்தவர்களால் வெறுக்கப்பட்டு வேலையின்றி யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார்.

Andhra,Beggar,Teacher,Civil Service,govt job,ஆசிரியர் அரசுப்பணி

இதற்கிடையே, 1994 ல் ஆசிரியர் அரசுப்பணிக்கு தேர்வெழுதி தேர்ச்சிபெறாத கேதாஸ்வர ராவ், 1996,1998 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுப் பதிவு செய்தபோதும் பணி கிடைக்காமல் போனது. அதன் பின்னர், உணவு,உடையின்றி ஒருவேளை உணவிற்காக ஏங்கி வந்த இவருக்கு 26 ஆண்டுகள் கழித்து தற்போது பணி ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 

Andhra,Beggar,Teacher,Civil Service,govt job,ஆசிரியர் அரசுப்பணி

ஓய்வுபெறும் வயதில் பணி ஆணை வந்திருக்கும் செய்தியைக் கிராம இளைஞர்கள் வாயிலாக தெரிந்துகொண்ட கேதாஸ்வர ராவ், சான்றிதழ்கள் வைத்திருப்பதால் மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆர்வமுடன் இருப்பதாக இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். 

மேலும் படிக்க | விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தொகுப்பாளினி பிரியங்கா

Andhra,Beggar,Teacher,Civil Service,govt job,ஆசிரியர் அரசுப்பணி

பிச்சைக்காரராக இருந்து அரசு ஊழியராக உள்ளவரை கிராம இளைஞர்கள் குளிக்க வைத்து முடிதிருத்தம் செய்து கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | நீங்களும் ஜெயிக்கனுமா ? - பிரக்ஞானந்தா சொன்ன வின்னிங்க் ட்ரிக்ஸ் !

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News