நீதிதுறையில் செயற்கை நுண்ணறிவு தேவை -தலைமை நீதிபதி போப்டே!

நீதிமன்றங்களுக்கு செயற்கை நுண்ணறிவு முறையை உருவாக்க வேண்டும் என தலைமை நீதிபதி போப்டே தெரிவித்துள்ளார்!

Last Updated : Jan 12, 2020, 07:10 PM IST
நீதிதுறையில் செயற்கை நுண்ணறிவு தேவை -தலைமை நீதிபதி போப்டே! title=

நீதிமன்றங்களுக்கு செயற்கை நுண்ணறிவு முறையை உருவாக்க வேண்டும் என தலைமை நீதிபதி போப்டே தெரிவித்துள்ளார்!

சனிக்கிழமையன்று நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (CJI) சரத் அரவிந்த் போப்டே, நீதிமன்றங்களுக்கு செயற்கை நுண்ணறிவு முறையை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது என்றும், நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்!

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகளின் பின்னணியைக் கருத்தில் கொண்டு, வழக்குக்கு முதன்மை தீர்ப்பை அளித்திட போப்டே தொழில்நுட்ப முறைமையை வலியுறுத்தினார். மேலும் அவர் அதனை காலத்தின் கோரிக்கை என்றும் அழைத்துள்ளார்.

நீதித்துறை அதிகாரிகளின் 19-வது மாநில அளவிலான பைனியல் மாநாட்டில் இந்த விஷயங்களை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

தலைமை நீதிபதி தனது அறிக்கையில், நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படாது என்பதை நீதிமன்றங்கள் உறுதி செய்வது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில்., 'நீதிதுறையில் மாற்றம் கொண்டுவர நாம் ஒவ்வொரு திறமையையும் பயன்படுத்த வேண்டும், நம்மிடம் உள்ள ஒவ்வொரு திறமையும் ஒரு நியாயமான கால எல்லைக்குள் நீதி கிடைப்பதை உறுதி செய்யும். நீதியின் தாமதம் யாரும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க ஒரு காரணமாக இருக்க விடக்கூடாது. நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படாது என்பதை நீதிமன்றங்கள் உறுதி செய்வது மிகவும் முக்கியம்.' என குறிப்பிட்டுள்ளார்.

தலைமை நீதிபதி கூறுகையில், 'நீதிமன்ற முறைமைக்கு செயற்கை நுண்ணறிவை (AI) உருவாக்க எங்களுக்கு வாய்ப்பு உள்ளது, நீதியில் தேவையற்ற தாமதங்கள் தடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக மட்டுமே செயல்படும். இந்த செயற்கை நுண்ணறிவு மனித நீதிபதிகளை மாற்றாது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார்.

இந்த மாநாட்டிற்கு நீதித்துறை செயல்முறை மறுசீரமைப்பு மற்றும் நீதித்துறை திறன் மேம்பாடு என்ற தலைப்பு இடப்பட்டு இருந்தது. இதில் கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா, உச்சநீதிமன்ற நீதிபதிகள் மோகன் எம் சாந்தனகவுதர், எஸ் அப்துல் நசீர் மற்றும் அஜிகுதிரா சோமையா போபண்ணா மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அபய் சீனிவாஸ் ஓகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Trending News