இந்தியாவின் ஒற்றுமை எதிரி நாடுகளுக்கு சவாலாக உள்ளது - மோடி!

இந்தியாவின் ஒற்றுமை எதிரி நாடுகளுக்கு சவாலாக உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம்..!

Last Updated : Oct 31, 2019, 01:07 PM IST
இந்தியாவின் ஒற்றுமை எதிரி நாடுகளுக்கு சவாலாக உள்ளது - மோடி!

இந்தியாவின் ஒற்றுமை எதிரி நாடுகளுக்கு சவாலாக உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம்..!

சர்தார் வல்லபாய் பட்டேலின் 144 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, குஜராத்தின் நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ள ஒற்றுமைச் சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பட்டேலின் 144ஆவது பிறந்தநாள் விழா, இன்று ஒற்றுமை தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, டெல்லி பட்டேல் சதுக்கத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் திருவுருவப் படத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினர். உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். 

இதையடுத்து, மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறுகையில்; பன்முகத்தன்மையைக் கொண்டாடுவது அதில் மறைந்திருக்கும் ஒற்றுமையைத் தருகிறது மற்றும் அதை வெளியே கொண்டு வருகிறது. வெவ்வேறு மொழிகளிலும், நாட்டின் நூற்றுக்கணக்கான பேச்சுவழக்குகளிலும் நாம் பெருமை கொள்ளும்போது, உணர்ச்சியின் பிணைப்பு இருக்கிறது என பிரதமர் தெரிவித்தார். நாட்டின் ஒற்றுமை, நாட்டு மக்களின் இயக்கம், முயற்சி மற்றும் கடின உழைப்பு ஆகியவை நமக்கு பின்னால் இருக்கும் உண்மையான பலம். இந்த பன்முகத்தன்மையை உலகம் நம் மந்திரமாகக் காண்கிறது, ஆனால் அது நம்மிடம் பதிந்திருக்கிறது என்றார். 

நாட்டின் ஒற்றுமைக்கான ஓட்டம், நாட்டின் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் நடக்கிறது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன். வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் பெருமை அடையாளம். வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும்.

நமது நாட்டின் பன்முகத்தன்மைதான் நமது பலம். அது பலவீனம் அல்ல. இந்தியாவை போன்று வேறு எந்த நாட்டிற்கும் பன்முகத்தன்மை கிடையாது. ஒற்றுமை தான் நமது அரசியல்சாசனத்திற்கு முன் மாதிரியாக உள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்காக, அடிமட்டத்தில் இருந்து அனைத்து அமைப்புகளையும் பலப்படுத்த வேண்டும். நமது தேசப்பற்றை ஆங்கிலேயர்களால் கூட தகர்க்க முடியவில்லை. இந்தியாவில் ஒற்றுமை, எதிரிநாடுகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். 

 

More Stories

Trending News