கத்வா சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பதான்கோட் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது!
கடந்த ஆண்டு ஜனவரி மாதம், ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா என்ற பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.
Kathua rape & murder case: Three have been sentenced to life imprisonment; Sanji Ram, Parvesh Kumar & Deepak Khajuria. pic.twitter.com/TPJD45NE4L
— ANI (@ANI) June 10, 2019
கத்துவாவிற்கு அருகில் ஒரு கிராமத்தில் நடைப்பெற்ற இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியை, காமுகர்கள் கோயிலில் 4 நாட்கள் அடைத்துவைத்து, மயக்க மருந்து கொடுத்து தொடர்ந்து தங்கள் பாலியல் இச்சைக்கு பயன்படுத்தியுள்ளனர். பின்னர் சிறுமியின் உடலை சிதைத்து அங்குள்ள காட்டுப்பகுதியில் புதைத்துள்ளனர்.
இச்சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. இதனையடுத்து இதில் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் காவல்துறை அதிகாரி தீபக் கஜூரியா, பர்வத குமார் மற்றும் கோவிலின் பிரதான பூசாரி சாஞ்சி ராம் ஆகியோர் அடங்குவர். இதனிடையே இந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு காஷ்மீரில் 2 அமைச்சர்கள் உட்பட இந்துத்துவா அமைப்பினர் நடத்திய போராட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இச்சூழலில் கடந்த ஆண்டு ஏப்ரல் 9-ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் கிரைம் காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் பஞ்சாப் பதான்கோட் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில், சிறுமி கொலை வழக்கில் சஞ்சய் ராம், விஷால், தீபக், சுரேந்தர் உட்பட 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது.
மேலே கூறப்பட்ட மூன்று குற்றவாளிகளும், ஆனந்த தத்தா, திலக் ராஜ் மற்றும் சுரிந்தர் ஆகியோர் ரன்பீர் குற்றவியல் கோர்ட்டின் கீழ் தண்டனை பெற்றனர். கடத்தல்காரர்கள், கற்பழிப்பு மற்றும் பலர் மத்தியில் சாட்சியங்கள் அழிக்கப்படுபவர்களுடன் தொடர்புடைய ஆறு பிரிவுகளின் கீழ் ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது சஞ்சய் ராம், ப்ரவேஷ் குமார் மற்றும் தீபக் கஜோரியா ஆகிய மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பதான்கோட் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் மற்ற 3 குற்றவாளிகளுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.