ராணுவ படை இறுதி நாள் ஆட்சேர்ப்பில் 300 பெண்கள் பங்கேற்பு!

சனிக்கிழமை அன்று நடைப்பெற்ற இராணுவ காவல் படைக்கான இறுதி நாள் ஆட்சேர்ப்பில் மட்டும் உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முந்நூறு பெண்கள் பக்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!

Last Updated : Sep 15, 2019, 03:27 PM IST
ராணுவ படை இறுதி நாள் ஆட்சேர்ப்பில்  300 பெண்கள் பங்கேற்பு! title=

சனிக்கிழமை அன்று நடைப்பெற்ற இராணுவ காவல் படைக்கான இறுதி நாள் ஆட்சேர்ப்பில் மட்டும் உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முந்நூறு பெண்கள் பக்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!

ஆக மொத்தத்தில், மிர்சாபூர், சாண்டஹௌலி, சோன்பத்ரா, ஜான்பூர், வாரணாசி, காசிப்பூர், மவு, தேவரியா, பாலியா மற்றும் கோரக்பூர் உள்ளிட்ட உத்தரபிரதேசத்தின் 12 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் இதில் 223 பேர் ஆவர். மீதமுள்ள வேட்பாளர்கள் அல்மோரா, பாகேஷ்வர், உதம் சிங் நகர், சம்பாவத், பித்தோராகர், சாமோலி, ஹரித்வார் மற்றும் ருத்ரபிரயாக் உள்ளிட்ட உத்தரகண்ட் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என புள்ளி பட்டியல் தெரிவிக்கிறது.

இதுகுறித்து உத்திர பிரதேஷ் மற்றும் உத்தரகண்ட் மாநில ஆட்சேர்ப்பு பணிப்பாளர் இயக்குநர் கர்னல் அசுதோஷ் மேத்தா தெரிவிக்கையில்.,  ராணுவ காவல்துறையினருக்கான ‘சிப்பாய் பொதுக் கடமை’ பதவிக்கான மருத்துவ மற்றும் உடல் பரிசோதனைகளின் முதல் கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது. "தகுதி பெறும் வேட்பாளர்கள் வரும் அக்டோபர் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள எழுத்துத் தேர்வை எதிர்கொண்டு தேர்ச்சி பெற வேண்டும். பின்னர் அவர்கள் இந்திய ராணுவத்தின் மேலதிக பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள்" என்று மேத்தா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்., "முந்தைய இரண்டு நாட்களைப் போலவே, ஆட்சேர்ப்புத் திட்டமும் காலை நேரங்களில் தொடங்கியது, அங்கு வேட்பாளர்கள் 1.6 கி.மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்ற உடல் பரிசோதனையில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆட்சேர்ப்பு இயக்கத்தின் முதல் நாளில் ஐநூறு வேட்பாளர்கள் பங்கேற்றனர். இரண்டாவது நாளில் 400 க்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் பங்கேற்பு காணப்பட்டது. மூன்று நாள் ஆட்சேர்ப்பு பேரணியில் மொத்தம் 1,343 வேட்பாளர்கள் பங்கேற்றனர். இதில் மகளிர் மட்டும் 300 பேர் என குறிப்பிட்டார்.

Trending News