ஸ்ரீநகரில் நடந்த என்கவுண்டரில் ஒரு பாதுகாப்பு படைவீரர் உட்பட மூன்று பயங்கரவாதிகள் பலி....
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று காலை நடந்த துப்பாக்கிச்சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், இந்த மோதலில் CRPF வீரர் ஒருவரும் உயிரிழந்தார்.
ஸ்ரீநகருக்கு உள்பட்ட படே கடால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் இன்று காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்துள்ளனர். அப்போது, பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
#UPDATE 3 terrorists and 1 police personnel killed during encounter between security forces & terrorists in Fateh Kadal area of Srinagar. #JammuAndKashmir https://t.co/cFdkryThIp
— ANI (@ANI) October 17, 2018
இதில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தச் சண்டையில் மூன்றாவதாகக் கொல்லப்பட்ட பயங்கரவாதி அபிபுல்லா எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பது இதுவரை தெரியவில்லை.
#JammuAndKashmir: Encounter underway between security forces & terrorists in Fateh Kadal area of Srinagar. More details awaited. pic.twitter.com/T8tfL5Wu55
— ANI (@ANI) October 17, 2018
இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு காவலர் ஒருவர் பலியானார். மேலும், 4 காவலர்கள் காயமடைந்தனர். அப்பகுதியில் பயங்கரவாதிகள் மேலும் பதுங்கியிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.