தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.....

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Last Updated : May 18, 2019, 03:44 PM IST
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..... title=

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வளிமண்டல காற்றழுத்த தாழ்வு நிலை, மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.ஓரிரு இடங்களில் இன்று வெப்பம் அதிகரிக்கும் என்றும் அனல் காற்று வீசக் கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை பெரியநாயக்கன் பாளையம், நெல்லை செங்கோட்டையில் தலா 4 செண்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. 

 

Trending News