Tik Tok வீடியோக்காக புது முயற்சி; இளைஞருக்கு பலத்த காயம்!!

டிக்டாக் செயலியில் பதிவேற்றுவதற்காக குட்டி கரணம் அடித்து சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்க்கு பலத்த காயம்!!

Last Updated : Jun 20, 2019, 12:33 PM IST
Tik Tok வீடியோக்காக புது முயற்சி; இளைஞருக்கு பலத்த காயம்!! title=

டிக்டாக் செயலியில் பதிவேற்றுவதற்காக குட்டி கரணம் அடித்து சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்க்கு பலத்த காயம்!!

இன்றைய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் டிக் டாக் செயலி முன்னெப்போதும் இல்லாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. டிக்டாக் தாக்கத்தால் ஒரு வித்தியாசமான சம்பவமும் தொடர்ந்து அரங்கேறிகொண்டுதான் உள்ளது. தற்போதைய இளைஞர்கள் தங்களை பிரபலமாக்க Tik Tok செயலியை முழுமையாக பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் டிக்டாக் செயலியில் பதிவேற்றுவதற்காக பின் புறமாக குட்டி கரணம் அடித்து சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் கழுத்திலும், முதுகெலும்பிலும் படுகாயம் பலத்த அடைந்துள்ளார். 

தும்கூரூ (Tumakuru) மாவட்டம் கொடேகெரே (Godekere) கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். பாடகர் மற்றும் நடனக் கலைஞரான இவர் சாகசங்களை செய்து டிக்டாக் செயலியில் பதிவேற்றி நண்பர்களிடம் பாராட்டை பெறுவதும் வழக்கம். அண்மையில் பின்புறமாக கரணம் அடிக்கும் சாகசத்தை மேற்கொண்ட அவர், துரதிர்ஷடமாக நிலை தடுமாறி விழுந்தார். கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அவரது கழுத்து மற்றும் முதுகெலும்பை சீரமைக்க மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளனர்.

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த குமாரின் குடும்பத்தில் அவர் மட்டுமே சம்பாதிக்கும் உறுப்பினர் என்ற நிலையில் மற்றவர்கள் தன்னைப் போல செயலிக்காக சாகசங்கள் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Trending News