பழைய ரூ.500 நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாள்

இன்று நள்ளிரவு வரையில் மட்டுமே பொதுமக்கள் தங்களுடைய 500 ரூபாய் நோட்டுகளை  பயன்படுத்த முடியும், இன்று நள்ளிரவுக்கு பின்னர் சலுகையை நீட்டிக்ககூடாது என்ற மத்திய அரசு முடிவு.

Last Updated : Dec 15, 2016, 09:24 AM IST
பழைய ரூ.500 நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாள் title=

புதுடெல்லி: இன்று நள்ளிரவு வரையில் மட்டுமே பொதுமக்கள் தங்களுடைய 500 ரூபாய் நோட்டுகளை  பயன்படுத்த முடியும், இன்று நள்ளிரவுக்கு பின்னர் சலுகையை நீட்டிக்ககூடாது என்ற மத்திய அரசு முடிவு.

இன்று நள்ளிரவு முதல் பழைய 500 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் செலுத்தற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம், பள்ளி கட்டணம் மற்றும் மத்திய அல்லது மாநில அரசு கல்லூரிகளில் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களுக்கு பழைய 500 ரூபாய் பயன்படாது.

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனைத்தொடர்ந்து, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதி வரையில் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் பொதுமக்கள் பழைய 500 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் டெபாசிட் செய்து, தங்களது கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் என்று பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த தாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

Trending News