டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு இலவச உதவி எண்

டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு வழங்கப்பட்டுள்ள இலவச உதவி எண் மூலம், சந்தேகங்களை எளிதில் தீர்க்க முடியும்.

Last Updated : Jan 5, 2017, 08:55 AM IST

Trending Photos

டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு இலவச உதவி எண் title=

புதுடெல்லி: டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு வழங்கப்பட்டுள்ள இலவச உதவி எண் மூலம், சந்தேகங்களை எளிதில் தீர்க்க முடியும்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பல்வேறு புதிய திட்டங்களில் டிஜிட்டல் முறை கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பாக வாடிக்கையாளர்களின் சந்தேகங்களை கேட்க "14444" என்ற இலச எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இ-வால்ட், ஆதார் மூலம் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட விவரங்களை கேட்டறியலாம். 

தற்போது ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து மொழிகளிலும் வசதி செய்து தரப்படும் என்று கூறியுள்ளது.

Trending News