புது டெல்லி: இந்த ஊரடங்கு காலத்தில் பல நாட்களாக காத்திருந்து, ஒருவழியாக சிறப்பு ரயில் (Special Trains) மூலம் சொந்த ஊருக்கு திரும்பும் சந்தோசத்தில், தனது சொந்த பணத்தை போட்டு டிக்கெட் வாங்கி, ரயில் ஏறி, சொந்த ஊரின் ரயில் ஸ்டேஷனை அடைந்த பிறகு, அங்கிருந்து வீட்டிற்கு போக, எந்தவித வாகனமும் இல்லாமல், ரயில் நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்தால், உங்கள் மனநிலை எப்படி இருக்கும். அப்படி ஒரு மனநிலையில் தான், புதன்கிழமை டெல்லி ரயில் நிலையத்தில் பலர் செய்வதறியாமல், ஏழை மக்கள் காத்திருந்தனர்.
நேற்று நான்கு ரயில்கள் புது தில்லி ரயில் (Delhi Raliway Station) நிலையத்திற்கு வந்தடைந்தன. ஆனால் டெல்லியில் பொது வாகனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டு இருப்பதால், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த மக்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்வதில் நிறைய சிரமங்களை எதிர்கொண்டனர். ரயில் நிலயத்தில் ஏராளமான மக்கள் சிக்கித் தவித்தனர். அந்த மக்கள் மூன்று முதல் ஐந்து மணி நேரம் நிலையத்தில் அமர்ந்து தங்களுக்கு ஏதாவது உதவி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்தனர்.
பணம் இல்லாதவர்கள் நடக்க வேண்டியிருந்தது:
இந்த ரயில்களில் வந்த சுமார் நான்காயிரம் பேர் டெல்லி-என்.சி.ஆர் (Delhi-NCR) பகுதியை சேர்ந்தவர்கள். அதாவது டெல்லி மற்றும் அதனை ஒட்டியுள்ள நொய்டா, குருகிராம் மற்றும் பிற என்.சி.ஆர் இடங்களில் வசிக்கும் மக்கள், அவர்களின் வீட்டிற்கு செல்ல வண்டிகளை ஏற்பாடு செய்தால், அவர்கள் மூன்று மடங்கு பணத்தை செலுத்த வேண்டியிருந்தது. பணம் இல்லாதவர்கள் நடக்க வேண்டியிருந்தது.
மேலும் அவர்களின் சொந்த வாகனம், அவர்களை அழைத்து செல்ல வந்திருந்தாலும், அந்த வாகனங்களை ரயில் நிலையத்தை (Delhi Raliway Station) அடைய அனுமதிக்கப் படவில்லை. இதனால் அவர்கள் டெல்லி அஜ்மேரி கேட்டில் இருந்து அவர்களை நடைபயணமாக தேஷ்பந்து குப்தா சாலைக்கு செல்ல வேண்டியிருந்தது.
அவர்களின் வாகனங்கள் டெல்லி காவல்துறையினர் ரயில் நுழைவாயிலிருந்து எட்டு நூறு மீட்டர் முன்னதாக தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளனார்கள்.
நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்க வேண்டும்:
புது தில்லி ரயில் நிலையத்திற்கு (Delhi Raliway Station) சிறப்பு ரயிலில் (Special Trains) வந்த பலர், நிர்வாகம் ஏற்கனவே அனைத்து தகவல்களையும் படிவத்தில் பூர்த்தி செய்துள்ளது. மக்கள் எங்கு செல்வார்கள், எத்தனை பேர் இருக்கிறார்கள். அவர்களை எப்படி வீட்டிற்கு அழைத்து செல்வது உட்பட விவரங்கள் நிர்வாகத்திடம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. இத்தகைய சூழ்நிலையில், வாகனங்கள் இல்லாததால் மக்களுக்கு இவ்வளவு சிரமங்கள் ஏற்படாதவாறு மக்களை மக்களை தங்கள் இலக்குக்கு அழைத்துச் செல்ல நிர்வாகம் (Special Trains) ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாததால், அவர்கள் நடந்தே செல்ல வேண்டியிருந்தது.
வெயிலில் மணிக்கணக்கில் காத்திருப்பு:
மக்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து டெல்லியை (Delhi Raliway Station) அடைந்தபோது, அவர்கள் நிலையத்திலிருந்து வெளியே வந்தார்கள். குடும்ப உறுப்பினர்கள் சிலர் ஏற்கனவே அவர்களுக்காக அங்கே காத்திருந்தார்கள். டெல்லியில் பொது போக்குவரத்து (Delhi Bus) மூடப்பட்டிருப்பதை அறியாதவர்கள்தான் மிகவும் பதற்றமடைந்தனர். ரயில் நிலையத்திற்கு வெளியே, வெயிலில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருந்தது.