சுற்றுலா சென்ற 2 வாலிபர்கள், நேத்ராவதி ஆற்றில் மூழ்கி பலி!

கர்நாடக மாநிலம் நேத்ராவதி ஆற்றில், சுற்றுலாவிற்காக சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலியானார்!

Updated: Jan 29, 2018, 11:36 AM IST
சுற்றுலா சென்ற 2 வாலிபர்கள், நேத்ராவதி ஆற்றில் மூழ்கி பலி!
File Photo

மங்களூரு: கர்நாடக மாநிலம் நேத்ராவதி ஆற்றில், சுற்றுலாவிற்காக சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலியானார்!

கார்நாடக மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் குழுவாக நேத்ராவதி ஆற்றின் அருகாமை பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். மொத்தம் 9 பேர் கொண்டு இக்குழுவில் இருந்து 2 பேர் நேத்ராவதி ஆற்றில் குளிப்பதற்காக சென்றனர்.

இருவரும் நீந்தி விளையாடுகையில் அசம்பாவிதமாக இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இருவரில் ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது எனவும், மற்றொருவரின் உடலை தேடும் பணி நடைப்பெற்று வருவதாகவும் உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.