யுகாதி திருநாளை முன்னிட்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் பிராத்தனை நடைபெற்றது. பக்தகர்கள் சிறப்பு மலர்களுடன் பிராத்தனையில் ஈடுபட்டனர்.
தெலுங்கு மற்றும் கன்னட புத்தாண்டை யுகாதி என்று கூறுவர். மகாராஷ்டிர மக்கள் இதே நாளை குடிபாட்வா எனவும் சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் பலவறாக கொண்டாடுகின்றனர். யுகத்தின் ஆரம்பத்தை யுகாதி என அழைக்கப்படுகிறது.
சைத்ர மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பை குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்நாளில் மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து யுகாதி பச்சடி செய்வதில் இருந்து நாள் ஆரம்பிக்கிறது. யுகாதி அன்று பல்வேறு இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தெலுங்கு சாகித்ய நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்குதல் ஆகியவை யுகாதி நாளன்று நடைபெறும்.
யுகாதி அன்று அறுசுவை கூடிய பதார்த்தமாக யுகாதி பச்சடி செய்யப்படுகிறது. இது யுகாதி அன்று செய்யப்படவேண்டிய மிக முக்கியமான பதார்த்தமாகும்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் தெலுங்கு வருட பிறப்பான யுகாதியை முன்னிட்டு சிறப்பு பிராத்தனை நடைபெற்றது.
Ugadi celebrations at Kannika Parameshwari Temple in Bengaluru, Karnataka. pic.twitter.com/xKtD03XgqL
— ANI (@ANI_news) March 29, 2017