மக்கள்தொகையில் சீனாவை முந்தி வேகமாய் செல்லும் இந்தியா...

2050-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் மக்கள் தொகை மேலும் 27 கோடி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஐ.நா. ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Jun 18, 2019, 09:02 AM IST
மக்கள்தொகையில் சீனாவை முந்தி வேகமாய் செல்லும் இந்தியா... title=

2050-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் மக்கள் தொகை மேலும் 27 கோடி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஐ.நா. ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மக்கள்தொகை தற்போது 137 கோடியாகவும், சீனா மக்கள்தொகை 143 கோடியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் மக்கள் தொகையானது வரும் 2027-ஆம் ஆண்டிற்குள் சீனாவை முந்தி இந்த நூற்றாண்டில் உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்கும் என ஐ.நா ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

அதன்படி 2050-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள் தொகை மேலும் 27 கோடி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது 770 கோடியாக உள்ள உலக மக்கள்தொகை அடுத்த 30 ஆண்டுகளில் 200 கோடி அதிகரித்து 970 கோடியாக இருக்கும். இந்த நூற்றாண்டின் இறுதியில் 1,100 கோடியாக மக்கள்தொகை அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

உலகின் மிகப்பெரிய நாடுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதங்கள் வேறுபடுகின்றன, அவற்றின் தரவரிசைகளை அளவுப்படி மீண்டும் வரிசைப்படுத்துகின்றன.

உலக மக்கள்தொகை அதிகரிப்புக்கு இந்தியா மட்டுமின்றி, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ, எத்தியோப்பியா, தான்சானியா, இந்தோனேசியா, எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் முக்கிய காரணமாக அமையும் எனவும் ஐ.நா. ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

2019 மற்றும் 2050-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் மக்கள்தொகை 273 மில்லியன் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் நைஜீரியாவின் மக்கள் தொகை 200 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு நாடுகளும் உலக மக்கள் தொகையில் 2050-ஆம் ஆண்டிற்கு 23% வரை உயர்த்தக்கூடும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய ஐ.நா. கணிப்புகள் 2022-ஆம் ஆண்டிலேயே இந்தியா, சீனாவை உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மிஞ்சும் என்று மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News