லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தின் சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க.-வுக்கு 403 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.
இந்நிலையில், பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை லோக் கல்யான் சங்கல்ப் பத்ரா என்ற பெயரில் பா.ஜ.க தேசியத்தலைவர் அமித் ஷா லக்னோவில் இன்று வெளியிட்டார்.
அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில், ஒட்டு மொத்த மாநில வளர்ச்சியை கருத்தில் கொண்டு 9 பிரிவாக தேர்தல் அறிக்கை பிரிக்கப்பட்டுள்ளது.
மாநில தேர்தலுக்கான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை:-
* விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.
* ஒவ்வொரு வீட்டில் இலவச எல்பிஜி இணைப்பு.
* அடுத்த ஐந்து ஆண்டுகளில், ரூ 150 கோடி நிதி விவசாயத்தில் வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்படும்.
* உத்தர பிரதேசத்தில் சட்டவிரோத சுரங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருக்க ஒரு சிறப்பு பணிப்பிரிவு வரும்.
* குரூப் 3, 4 அலுவலர்களுக்கு இன்டர்வியூ கிடையாது.
* 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக கல்வி.
* 1 ஜிபி இலவச இன்டர்நெட் வசதியுடன் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள்.
* அனைத்து பல்கலைக்கழகங்கள் இலவச வைஃபை வசதி கிடைக்கும்.
* உணவு பதப்படுத்தும் பூங்கா.
* 24 மணி நேரம் மின் வழங்கப்படும்.
* ஸ்லாட்டர் வீடுகள் மூடப்படும்.
* சாதி, மத மோதல்கள் உருவாகாமல் தடுக்கு முன்கூட்டியே குழு அமைக்கப்படும்.