இந்தூர் - பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து சம்பவம் மிகவும் வேதனையளிப்பதாக பிரதமர் மோடி தனது இரங்களை தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் புகாரியன் அருகே பாட்னா - இந்தூர் விரைவு ரயில் அதிகாலை தடம் புரண்டது. இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 90-க்கு அதிகமாக அதிகரி த்து உள்ளது. 150-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சம்பவ விபத்து நேரிட்ட பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடை பெற்று வருகிறது. 150 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு அவர்கள் அருகில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஏரா ளமான ஆம்புலன்ஸ்கள், தனியார் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
ரெயில் விபத்து குறித்து பிரதமர் மோடி அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார். அவர் தனது டுவிட்டரில் இந்தூர் - பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்காக கண்ணீர் மல்க கலங் குகிறேன். அவர்களது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். காயம் அடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கி ன்றேன் என்று கூறியுள்ளார். பிரதமர் மோடி, மேலும் இது தொடர்பாக ரெயில்வே மந்திரி சுரேஷ்பிரபு என்னிடம் பேசி உள்ளார். அவர் நிலைமையை தொடர்ச்சியாக கவனித்து வருகிறார் என்றும் தெரிவி த்துள்ளார்.
Anguished beyond words on the loss of lives due to the derailing of the Patna-Indore express. My thoughts are with the bereaved families.
— Narendra Modi (@narendramodi) November 20, 2016
பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கவும், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கவும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இந்த தொகை பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட உள்ளது.
Prayers with those injured in the tragic train accident. I've spoken to @sureshpprabhu, who is personally monitoring the situation closely.
— Narendra Modi (@narendramodi) November 20, 2016
PM @narendramodi has announced ex gratia of Rs. 2 lakhs from PMNRF for the next of kin of those killed in the rail accident in Uttar Pradesh
— PMO India (@PMOIndia) November 20, 2016
PM @narendramodi has also announced Rs. 50,000 for those seriously injured in the rail accident in Uttar Pradesh.
— PMO India (@PMOIndia) November 20, 2016
சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்த மத்திய ரயில்வே துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.