உ.பி ரெயில் விபத்து: மாநில அரசு, மத்திய அரசு நிதியுதவி அறிவிப்பு

Last Updated : Nov 20, 2016, 01:26 PM IST
உ.பி ரெயில் விபத்து: மாநில அரசு, மத்திய அரசு நிதியுதவி அறிவிப்பு title=

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் புகாரியன் அருகே பாட்னா - இந்தூர் விரைவு ரயில் அதிகாலை தடம் புரண்டது. இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 90-ஆக உள்ளது. 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சம்பவ விபத்து நேரிட்ட பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 150 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஏராளமான ஆம்புலன்ஸ்கள், தனியார் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 

சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்த மத்திய ரயில்வே துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பலியானவர்களுக்கு நிதியுதவி அளிக்க மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.

உத்தர பிரதேச மாநில அரசு ரயில் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளது. படுகாயமடைந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கவும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

 

 

பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3.5 லட்சம் வழங்கவும், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் வழங்கவும் மத்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 

 

பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கவும், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கவும் மத்திய பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

 

 

பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கவும், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கவும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இந்த தொகை பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட உள்ளது.

 

 

 

Trending News