காங்கிரஸ் கட்சியால் மக்கள் தலைவிதி மாறவில்லை - மோடி!

நான்கு தலைமுறைகளாக காங்கிரஸ் நாட்டை ஆண்ட போதிலும், மக்களில் தலைவிதி மாறவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!

Last Updated : Nov 18, 2018, 01:38 PM IST
காங்கிரஸ் கட்சியால் மக்கள் தலைவிதி மாறவில்லை - மோடி! title=

நான்கு தலைமுறைகளாக காங்கிரஸ் நாட்டை ஆண்ட போதிலும், மக்களில் தலைவிதி மாறவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!

வரும் நவம்பர் 20-ஆம் நாள் சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக சார்பில் பிரதமர் மோடி இன்று சத்தீஸ்கரின் ராய்பூர் பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். பிரச்சாரத்தின் போது அவர் காங்கிரஸ் கட்சியினை கடுமையாக சாடினார்.

ராய்பூர் கூட்டத்தில் பேசிய அவர்... சத்தீஸ்கர் மாநிலம் இந்தியாவில் தான் உள்ளது என்பதை காங்கிரஸ் கட்சியினர் உணரவில்லை. ஆனால் முதல்வர் ராமன் சிங், சத்தீஸ்கர் மக்களின் மீது அக்கரை கொண்டவர். இதன் காரணமாக தான் மாநிலத்தில் நக்சல் அச்சுறுத்தலை அடியோடு அழிக்க மத்திய அரசின் உதவியை பலமுறை நாடியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக பெரிதும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றார் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர்., நான்கு தலைமுறைகளாக காங்கிரஸ் நாட்டை ஆண்ட போதிலும் பொதுமக்களின் தலையெழுத்து மாறவில்லை. தங்களது குடும்பத்தாரின் வளர்ச்சியினை மட்டும் கருத்தில் கொண்டு செயல்பட்டு வரும் காங்கிரஸ் தலைமையால் மக்களின் நலனை பற்றி யோசிக்க நேரமில்லை என காங்கிரஸ் கட்சியினை கடுமையாக சாடியுள்ளார்.

முன்னதாக கடந்த வெள்ளி அன்று சத்தீஸ்கரின் அம்பிகாப்பூர் பகுதியில் பேசிய அவர் காந்தி குடும்பத்தை சேராத ஒருவரை கட்சி தலைமை பொறுப்பில் அமர வைக்க காங்கிரஸ் முன்வருமா? என காங்கிரஸ் கட்சிக்கு நேரடி சவால் விடுத்தது குறிப்பிடத்தக்ககது.

சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி குறித்து பேசிய அவர்... சத்தீஸ்கர் மாநிலத்திற்கு தற்போது 18-வயது ஆகின்றது. 18 வயது என்பது மிக முக்கியமான வயது, குடும்பங்களில் பெற்றோர் தங்களது குழந்தைகளின் 18-வது வயதின்போது அதிக கவனம் செலுத்துவர். அதேப்போல தான் தற்போது சத்தீஸ்கர் மாநிலத்திற்கும் அதிக கவனம் தேவைப்படுகிறது. பாஜக மாநிலத்தின் மீதான கவனத்தினை அதிகம் கொண்டுள்ளாதல், மீண்டும் பாஜக-விற்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Trending News