ஐதராபாத்தில் நடக்கும் சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள், இவாங்கா நேற்று அதிகாலை இந்தியா வந்தார். நவம்பர் 28 முதல் 30 வரை ஹைதராபாத்தில் இவாங்கா இருப்பார்.
சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார். இம்மாநாட்டில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 1,500க்கும் அதிகமான தொழில் முனைவோர்கள் அதிகாரிகள் பங்கேற்றனர்.
சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு: இவாங்கா டிரம்ப் பங்கேற்பு: வீடியோ
இந்த மாநாட்டில் தேர்வு செய்யப்படும் 100 தொழில்முனைவோரை அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா சந்தித்து வருகிறார். மேலும் சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்று பேசினார்.
எப்படி 1935 கோடிக்கு உரிமையாளரானார் இவாங்கா டிரம்ப்
இந்நிலையில், இன்று ஹைதராபாத்தில் உள்ள கோல்கொண்டா கோட்டையை அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்க ட்ரம்ப் பார்வையிட்டார். அதன் காணொளி கீழே காணலாம்.
வீடியோ:-
#WATCH Advisor to US President, #IvankaTrump visits Golconda Fort in Hyderabad pic.twitter.com/CQHZK0bjYS
— ANI (@ANI) November 29, 2017