குஜராத் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் நேற்று தொடங்கி நடந்து முடிந்துள்ள நிலையில், அங்குள்ள ஒரு கிராமம் மட்டும் ஓட்டுப் போடாமல் தேர்தலை புறக்கணித்து உள்ளது.
குஜராத் மாநிலத்தில் முதல் கட்டமாக 89 தொகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. முதல் கட்ட தேர்தலில் சுமார் 68 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மோர்பி மாவட்டம், கஜாதி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவர் கூட வாக்களிக்க நேற்று வரவில்லை என தகவல் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடிநீர் பற்றாக்குறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அக்கிராம மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக தேர்தலை புறக்கணித்துள்ளனர். ஓட்டு போட வைக்க தங்களால் இயன்ற முயற்சிகளை செய்ததாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.