நீரவ் மோடி மோசடி குறித்து 2011-லேயே புகார் அளித்தோம்: சுனில் மேத்தா!

நீரவ் மோடி ரூ.11,400 கோடி மோசடி குறித்து எனக்கு தெரியவந்ததுமே சிபிஐயிடம் புகார் அளித்துவிட்டேன் என்று பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவர் சுனில் மேத்தா தெரிவித்துள்ளார்.  

Last Updated : Feb 15, 2018, 04:44 PM IST
நீரவ் மோடி மோசடி குறித்து 2011-லேயே புகார் அளித்தோம்: சுனில் மேத்தா! title=

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.11,000 கோடி அளவுக்கு சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்தது, கண்டுபிடிக்கப்பட்டதாக பஞ்சாப் நேஷனல் வங்கி கூறியிருந்தது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11000 கோடி முறைகேடு நடந்ததாக வங்கி நிர்வாகமே பங்குச் சந்தைக்கு (பிஎஸ்இ) அறிக்கையில் அனுப்பியுள்ளது. இந்த மோசடி குறித்து கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த மோசடி வழக்கில் வைர வியாபாரி நீரவ் மோடி மீது புகார்கள் எழுந்துள்ளன. இந்த முறைகேடுகள் கடன் பொறுப்பேற்பு ஆவணங்கள் மூலம் நடைபெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீரவ் மோடியின் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதை தொடர்ந்து அவர் சுவிட்சர்லாந்துக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவர் சுனில் மேத்தா கூறுகையில்:-

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் விசாரணை அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ரூ.11,000 கோடி மெகா மோசடியில் ஈடுபட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி மும்பை வைர வியாபாரி நீரவ் மோடி ரூ 11, 400 கோடி மோசடி செய்தது குறித்து தெரியவந்ததும் சிபிஐயிடம் புகார் அளித்துவிட்டேன் என்று தெரிவித்தார்.

மேலும் அவர், ஆக்ஸிஸ் வங்கி மற்றும் அலகாபாத் வங்கிகளிலும் நீரவ் மோடி கடன் வாங்கி மோசடி செய்துவிட்டார்.

2011-ஆம் ஆண்டிலேயே நீரவ் மோடி மோசடி குறித்து செபி அமைப்பிடம புகார் அளித்தோம். ஊழலுக்கு உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என்றார்.

அருணாசல பிரதேசத்திற்கு பிரதமர் மோடி வருகை :சீனா கண்டனம்

Trending News