மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்திக்க ஏப்ரல் 11-ம் தேதி சென்னை வரவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பா.ஜ.க-விற்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்க தீவிரமாக உள்ளார் மம்தா பானர்ஜி. இதை தொடர்ந்து இவர் மூன்றாவது தேசிய கட்சியை உருவாக்குவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதன் அடிப்படையில் தெலுங்கானா முதல்வர் சந்திசேகர ராவ், ஆந்திரா முதல்வர் சந்திரா பாபு நாயுடு ஆகியோரை தொடர்ந்து பா.ஜ.க-வுக்கு எதிரான அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சமீப காலமாக சந்தித்து வருகிறார் மம்தா பானர்ஜி.
இந்நிலையில் உடல் நிலை குறைவு காரணமாக சிகிச்சையினால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்திக்க விரும்புவதாக கனிமொழியிடம் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இந்த செய்தியை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பிற்கு பச்சை கோடி காட்டிய ஸ்டாலின் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, ஏப்ரல் 11-ம் தேதி சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை சந்திக்க மம்தா வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
West Bengal Chief Minister Mamata Banerjee to visit Chennai for two days 10th and 11th April, likely to meet M. Karunanidhi. (File Pic) pic.twitter.com/EQbjQVFhnN
— ANI (@ANI) March 30, 2018