நான் சொன்னது உண்மையிலேயே அடிப்படையான கருத்து: ஹரியானா CM

நான் சொன்னது உண்மையிலேயே அடிப்படையான ஒன்று என பெண்கள் பாலியல் சர்ச்சை குறித்த பேச்சில் ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் விளக்கம்!   

Last Updated : Nov 18, 2018, 03:40 PM IST
நான் சொன்னது உண்மையிலேயே அடிப்படையான கருத்து: ஹரியானா CM  title=

நான் சொன்னது உண்மையிலேயே அடிப்படையான ஒன்று என பெண்கள் பாலியல் சர்ச்சை குறித்த பேச்சில் ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் விளக்கம்!   

பெண்கள் தங்களுக்கு நன்கு தெரிந்த ஆண்களிடம் சண்டை ஏற்படும் நேரங்களில் மட்டும் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்வதாக ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நாட்டில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிக்கவில்லை என தெரிவித்தார். பாலியல் வன்கொடுமை, ஈவ் டீசிங் போன்ற சம்பவங்களை பொருத்தவரை, 80 முதல் 90 சதவீதம் நன்கு அறிந்த இருவருக்கு இடையே சாதாரணமாக நடப்பதாகவும், பின்னொரு நாளில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டால் அந்த சம்பவம் வழக்காக பதிவு செய்யப்படுவதாகவும் மனோகர்லால் கட்டார் கூறியுள்ளார்.

ஹரியானா முதல்வர் இவ்வாறு பேசியுளது சமூக ஆர்வலர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் இந்த சர்ச்சையான கருத்துக்கு பலரும் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘ஒரு மாநிலத்தின் முதல்வரே இப்படித்தான் வல்லுறவுகள் குறித்து சிந்திக்கிறார் என்றால், அங்கு பெண்கள் எப்படி பாதுகாப்பாக உணர்வார்கள். ஹரியானா முதல்வர் பாலியல் பலாத்காரங்களுக்கு நியாயம் கற்பிக்கிறார். இதனால் தான் அம்மாநிலத்தில் தொடர்ந்து பலாத்காரங்கள் அதிகமாக நடக்கின்றன. பலாத்காரத்தில் ஈடுபட்ட நபர்கள் சுதந்திரமாக சுற்றுகின்றனர்' என்று காட்டமாக ட்வீட் செய்துள்ளார்.

2014 - 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஹரியானாவில் பாலியல் வல்லுறவு வழக்குகள் 47 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக ஒரு அறிக்கை, அம்மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் கட்டாரின் இந்தக் கருத்து மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. 

 

Trending News