சர்வதேச பொருளாதார அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றார் பிரதமர் மோடி

சர்வதேச பொருளாதார அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்ள சுவிட்சர்லாந்து சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடியை, அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோப்வென் நேரில் சென்று வரவேற்றார்.

Last Updated : Jan 23, 2018, 12:25 PM IST
சர்வதேச பொருளாதார அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றார் பிரதமர் மோடி title=

70 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் சர்வதேச பொருளாதார அமைப்பின் மாநாடு சுவிட்சர்லாந்தின் தாவோஸில் நகரில் நான்கு நாட்கள் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களும் தாவோஸ் புறப்பட்டுச் சென்றார். சுவிட்சர்லாந்து சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடியை, அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோப்வென் நேரில் சென்று வரவேற்றார். பின்னர் சுவிட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட்-ஐ சந்தித்து பேசினார். சர்வதேச பொருளாதார அமைப்பின் மாநாடு கலந்துகொள்ளும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார்.

பின்னர் தாவோஸ் நகரில் மாநாட்டு அதிகாரிகளுடன் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நாட்டின் முதலீட்டு வாய்ப்புகளைப் பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

 

 

 

 

 

 

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News