குர்மித் ராம் ரஹிம் சிங் குற்றவாளி என கூறப்பட்டதால், ஹரியானா மற்றும் சுற்றுபுற மானிலங்களில் பெரும் கலவரம் நிலவி வருகிறது. கலவரத்தில் சிக்கி இதுவரை 30 பேர் பலியாகியுள்ளனர்
கலவரத்தில் ஏற்பட்டுள்ள சேதம் காரணமாக குர்மித் ராம் ரஹிம் சிங் சொத்துக்கள் மொடக்கப் படுவதாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் "அரசியல் நலன்களுக்காக பஞ்ச்குலா எரிக்கப்படுவதை நீங்கள் அனுமதிக்கின்றீர்கள்" என்று உயர்நீதிமன்றம் ஹரியானா அரசுக்கு தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தால் தேரா சச்சா சவுதா தலைவர் குர்மித் ராம் ரஹிம் சிங் குற்றவாளி என நிறுபிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 28 ம் தேதி பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் இவ்வழக்கு தொடர்பாக தண்டைனையை உறுதி செய்யவுள்ளது. குறைந்தபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விசாரணை நீதிமன்ற நீதிபதி ஜக்டீப் சிங் ஆகஸ்ட் 28 ம் குவாண்டம் தீர்ப்பை வாசிப்பார் என தெரிகிறது
ராம் ராகிமுக்கு எதிரான இவ்வழக்கு 2002 ம் ஆண்டு தனது இரண்டு பெண் சீடர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டு வந்த கடிதத்தின் அடிப்படையில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதி மன்றத்தின் உத்தரவின் பேரில் பதிவு செய்யப்பட்டது.