Railway Viral Video: சமூக ஊடகங்களில் லைக்ஸ் பெறுவதற்கு நெட்டிசன்கள் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர் எனலாம். சமூக சார்ந்த பதிவு, ரீல்ஸ் என பலரும் வசனங்களில் ஸ்டண்ட் செய்து வந்தாலும், இன்னும் பலர் உண்மையான ஸ்டண்ட் மற்றும் ஆபத்தான வித்தைகளை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அந்த வகையில், பீகார் மாநிலம் மன்பூர் சந்திப்பில் உள்ள ரயில்வே பிளாட்பாரத்தில் இளைஞர் ஒருவர் தொடர்ந்து பல்டி அடித்து வித்தை காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. ரயில்வே பாதுகாப்புப் படையின் (RPF) அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளதோடு, பொதுவெளியில் தொந்தரவு ஏற்படுத்தியதாக அந்த நபர் கைது செய்யப்பட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளது. வீடியோவில், அந்த இளைஞர் தலைகீழ் பல்டி அடித்து தனது அக்ரோபாட்டிக் திறமையை வெளிப்படுத்துவதைக் காணலாம், மற்ற பயணிகள் அவரைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள்.
வைரல் வீடியோ:
A young man who gained fame for his reckless stunts at Manpur Junction, was arrested by #RPF for creating nuisance and unauthorized entry.
We hope this will serve as a lesson for others who put their lives at risk for likes and shares in social media. #SafetyFirst pic.twitter.com/qDCj9H9mFK
— RPF INDIA (@RPF_INDIA) July 10, 2023
ரயில்வே பாதுகாப்பு படை பகிர்ந்த அந்த வீடியோ பதிவில்,"மான்பூர் சந்திப்பில் தனது பொறுப்பற்ற ஸ்டண்ட்களுக்காக புகழ் பெற்ற ஒரு இளைஞன், தொந்தரவு மற்றும் அனுமதியின்றி நுழைந்ததற்காக ரயில்வே பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார். சமூக ஊடகங்களில் லைக்ஸ் மற்றும் ஷேர்களுக்காக தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும் என நம்புகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், இந்த ட்வீட் இணைய பயனர்களிடையே விவாதத்தைத் தூண்டியது. பெரும்பாலான பயனர்கள் இந்த ஸ்டண்டை ஆதரிக்கவில்லை என்றாலும், அவரைக் கைது செய்வது சற்று கடுமையானது என்றும் அதற்குப் பதிலாக அவருக்கு எச்சரிக்கை அல்லது ஆலோசனை வழங்கயிருக்க வேண்டும் என்றும் அவர்கள் கருதினர். இதற்கிடையில் அவருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர்.
மேலும் படிக்க | முதல்வர் வீட்டு அருகேயே வெள்ளப்பெருக்கு... அபாய அளவை தாண்டிய யமுனை நீர்மட்டம்
ஒரு ட்விட்டர் பயனர்,'' நல்ல வேலை செய்துள்ளது RPF. ரயில் நிலையங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பாதுகாப்பான பயணம் செய்ய வேண்டும். இருப்பினும், பல அங்கீகரிக்கப்படாத நபர்கள் பெரும்பாலும் மும்பை புறநகர்ப் பகுதியில் உள்ள பல்வேறு நிலையங்களைச் சுற்றிச் செல்வதைக் காணலாம். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர், ''கைது செய்வதா? கவுன்சிலிங் போதுமானதாக இருந்திருக்கும், அவர் யாருக்கும் தீங்கு செய்யவில்லை, அதாவது அவர் ஒரு குழந்தை.'' என குறிப்பிட்டிருந்தார். மூன்றாவதாக, ''இந்த வீடியோவில் நபர் உருவாக்கிய எந்த தொந்தரவும் நான் காணவில்லை. ரயில்வே பிளாட்பாரம் காலியாகத் தெரிகிறது. அவர் பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பதாக இல்லை. நெரிசலான ஸ்டேஷனில் இதைச் செய்திருந்தால், புரிந்து கொள்ள முடியும், ஆனால் இங்கே அப்படி இல்லை" என குறிப்பிட்டுள்ளனர்.
நான்காவது ஒருவர், ''ஐயா கைது செய்வதற்குப் பதிலாக, பள்ளி/கல்லூரி நேரத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பும், பள்ளி/கல்லூரி நேரத்திற்குப் பிறகு மாலையில் இரண்டு மணிநேரமும் ஸ்டேஷன் வளாகத்தை துடைப்பது போன்ற கட்டாய சமூக சேவை இருக்க வேண்டும்" என ட்வீட் செய்துள்ளார்.
ஐந்தாவது ஒருவர், ''இடம் தவறாக இருந்தது, அது ஏதேனும் அசம்பாவிதத்திற்கு வழிவகுக்கும், ஆனால் நாம் அவருக்கு எச்சரிக்கை மற்றும் வழிகாட்டுதலைக் கொடுக்க வேண்டும், மேலும் அவர் மிகவும் இளம் திறமையானவராக இருப்பதால் அவரது ஒழுக்கத்தை உயர்த்த வேண்டும், அவர் சரியாக இருந்தால் தடகளத்தில் பிரதிநிதித்துவப்படுத்தலாம். மேலும் ஒருவர் மேலும் கூறுகையில், ''அவரை கைது செய்வது மிக அதிகம், எச்சரிக்கையுடன் அவரை விடுவிக்க வேண்டும். நீங்கள் கைது செய்ய வேண்டும் என்றால், மொபைல் போன்கள் அல்லது பயணிகளின் மதிப்புமிக்க பொருட்களை திருடும் குற்றவாளிகளை கைது செய்யுங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | தில்லி முதல்வர் கூட்டிய அவசர கூட்டம்... யமுனையில் பெருகும் வெள்ளம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ