மும்பையில் கொரோனா கோர தாண்டவம்....46 ஆம்புலன்ஸ்களை வழங்கி ஆதரவு அளிக்கும் ZEE குழு

கொரோனா வைரஸ் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவுக்கு உதவும் ஒரு நடவடிக்கையாக, ஜீ ஃபைட்ஸ் கோவிட் -19 பிரச்சாரத்தின் கீழ் ஜீ குழு ஞாயிற்றுக்கிழமை மும்பை நகராட்சிக்கு 46 ஆம்புலன்ஸ்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

Last Updated : Jun 15, 2020, 10:08 AM IST
    1. தொற்றுநோய்களின் போது ஜீ குழுமத்தின் பங்களிப்புக்கு மகாராஷ்டிரா அரசு நன்றி தெரிவித்துள்ளது
    2. ZEE குழு நாடு முழுவதும் 200 ஆம்புலன்ஸ், 40,000 பிபிஇ கிட் மற்றும் 100+ ஐசியு யூனிட்களை நன்கொடையாக அளிக்கிறது
    3. 46 ஆம்புலன்ஸ்கள் பி.எம்.சி.க்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.
மும்பையில் கொரோனா கோர தாண்டவம்....46 ஆம்புலன்ஸ்களை வழங்கி ஆதரவு அளிக்கும் ZEE குழு title=

மும்பை: கொரோனா தொற்று (Coronavirus) மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவுக்கு உதவும் நடவடிக்கையில், ஜீ ஃபைட்ஸ் கோவிட் -19 பிரச்சாரத்தின் கீழ் ஜீ குழுமம் மும்பை நகராட்சிக்கு 46 ஆம்புலன்ஸ்களை ஞாயிற்றுக்கிழமை வழங்கியுள்ளது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்து வருவதால், இந்தியாவின் நிதி தலைநகரில் உள்ள நோயாளிகள் ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால் தொடர்ந்து மருத்துவமனையை அடைய முடியாமல் தவிக்கின்றனர்.

மும்பையின் பி.கே.சி.யில் ZEE என்டர்டெயின்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி புனித் கோயங்கா முன்னிலையில் 46 ஆம்புலன்ஸ்கள் பி.எம்.சி.க்கு நன்கொடையாக வழங்கப்பட்டன. இதன்போது, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அமைச்சரவை அமைச்சர்கள் ஆதித்யா தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே ஆகியோருடன் கலந்து கொண்டார்.

 

READ | COVID-19 தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள்.. மூன்றாவது இடத்தில் இந்தியா

 

 

ZEE குழு நாடு முழுவதும் 200 ஆம்புலன்ஸ், 40,000 பிபிஇ கிட் மற்றும் 100+ ஐசியு யூனிட்களை நன்கொடையாக அளிக்கிறது.

 

READ | இந்தியாவில் COVID-19 நவம்பர் நடுப்பகுதியில் உச்சத்தை அடையும் என தகவல்..!

 

தொற்றுநோய்களின் போது ஜீ குழுமத்தின் பங்களிப்புக்கு மகாராஷ்டிரா அரசு நன்றி தெரிவித்துள்ளது.

 

 

ஜீ குழுமம் எப்போதும் சமூக நலனுக்காக செயல்பட்டு வருவதாக மகாராஷ்டிரா அமைச்சரவை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார். இந்த சிக்கலில் அரசாங்கத்திற்கு ஆம்புலன்ஸ் வழங்கிய ஜீ குழுவுக்கு நன்றி.

Trending News