12 மொழிகளில் வெளியாகிறது Zee குழுமத்தின் ZEE5 இணையதளம்!

Zee குழுமத்தின் பொழுதுபோக்கு பிரிவு நிறுவனமான Zee Entertainment Enterprises Ltd-ன் ப்ரத்தியேக இணையதள சேவை தொடங்கப்பட்டது!

Last Updated : Feb 15, 2018, 08:39 AM IST
12 மொழிகளில் வெளியாகிறது Zee குழுமத்தின் ZEE5 இணையதளம்! title=

Zee குழுமத்தின் பொழுதுபோக்கு பிரிவு நிறுவனமான Zee Entertainment Enterprises Ltd-ன் ப்ரத்தியேக இணையதள சேவையின் அறிவிப்பினை, ZEE International தலைமை நிர்வாக அதிகாரி அமித் கோயங்கா இன்று அறிவித்துள்ளார்!

அதன்படி இன்று பிப்.,14 2018 முதல் துவங்கி Zee Entertainment குழுமத்தின் பொழுதுபோக்கு வலைப்பக்கத்தின் சேவையினை மக்கள் கண்ட ரசிக்கலாம். ZEE5 என்ற பெயரில் இந்த இணையதள சேவை இந்தியா முழுவதும் வழங்கப்படவுள்ளது.

மொழிவாரியான பாகுபாடுகள் இன்றி, நாடுமுழுவதும் அனைத்து மக்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் வகையினில் இந்த இணையதள சேவை மக்களை சென்றடையவுள்ளது.

தற்போது உலகம் முழுவதும் டிஜிட்டல் தளம் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், உலகை தன் கைக்குள் அடக்கும் இணையதள உதவியுடன் மக்களை சென்றடையும் வகையில் இந்த இணையதள சேவை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ZEEE5 பற்றி....

ZEEE5 ஆனது நேரடி தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களிலு, உலகெங்கிலும் உள்ள மக்களை மகிழ்வித்து வருகிறது. சுமார் 100000 மணிநேர தேவை நிகழ்ச்சிகளுடன் வெளிவருகிறது. குறிப்பாக பிரத்தியேக காட்சிகள், இந்திய திரைப்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள், இசை, ஆரோக்கியம், வாழ்வியல் தொடர்பான அம்சங்களையும் அது கொண்டு வருகிறது.

அதேப் போல் 90-க்கும் அதிகமான தொலைகாடசிகளின் நேரடி ஒளிப்பரப்பினை பார்க்கவும் இந்த வலைதளம் வழிவகுக்கிறது.

இந்த இணைய சேவையானது 12 இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதன்படி தமிழ், மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, பெங்காளி, தெலுகு, ஓரியா, போஜ்பூரி, குஜராத்தி, பஞ்சாபி, கன்னடா ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

ZEE5 சிறப்பம்சங்கள்...

  • குறல் தேடல் வசதிபெற்ற முதல் பொழுதுபோக்கு இணையதளம். 
  • தனிப்பட்ட மொபைல் செயலிமூலம் வெளியாகிறது.
  • யூடியூப் போன்று, டேட்டா இணைப்பு இல்லாத போதும், நிகழ்ண்ணிகளை காண வழிவகுக்கிறது.
  • தங்களது மொபைல் மற்றும் சேமிப்பு களன்களில் சேமிக்கும் வசதிகளும் உள்ளது.

விலை...

மாதாந்திரம் ரூ.150 செலுத்தி ZEE5 சந்தாதாரர் ஆகும் ஒருவர், ZEE5 பக்கத்தின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒரு மாதத்திற்கு கண்டு ரசிக்கலாம். ஆனால் தற்போது அறிமுக சலுகையாக இந்த வசதியினை மக்கள் ரூ.99 க்கு பெற்று ரசிக்கலாம்.

ZEE5 கீதம்...

இன்றைய தினமே ZEE5-ன் கீதம் அனைத்து மொழிகளிலும் வெளியானது. அனைவரது கவனத்தினையும் ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த கீதத்தினை தங்கல் திரைப்பட இயக்குனர் நித்திஷ் திவாரி இயக்கியுள்ளார். 

ZEE5 என்றால் என்ன?

ZEE குழுமத்தின் சேவையானது 5 கண்டங்களில் கிடைக்கப்பெறுகிறது என்பதினை குறிக்கும் வகையினிலேயே ZEE5 என்று குறிக்கப்பட்டுள்ளது. கடந்த 25 வருடங்களாக தங்களது சேவையினை Zee குழுமம் சிறப்பாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

173 நாடுகளில் சுமார் 1.3 பில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள ZEEL உலகலாவிய ஊடகங்களில் முதன்மையானதாக விளங்குகிறது என்றால் மிகையள்ள!

Trending News