அனுமதி இன்றி அசைவ உணவு விநியோகம்; Zomato, Swiggy-க்கு நோட்டீஸ்!!

ஹரித்வாரில் அசைவ உணவு விநியோகம் செய்ததற்காக ஸொமாட்டோ, ஸ்விஃக்கி நிறுவனங்களுக்கு அம்மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Last Updated : Mar 17, 2019, 08:45 PM IST
அனுமதி இன்றி அசைவ உணவு விநியோகம்; Zomato, Swiggy-க்கு நோட்டீஸ்!! title=

ஹரித்வாரில் அசைவ உணவு விநியோகம் செய்ததற்காக ஸொமாட்டோ, ஸ்விஃக்கி நிறுவனங்களுக்கு அம்மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் உணவு என்றவுடனே நமது நியாபகத்திற்கு வருவது ஆன்லைன் உணவு நிறுவனங்கள் மட்டும் தான். அதிலும், குறிப்பிட்டு நமது நியாபகத்திற்கு உடனே நினைவில் வருவது ஸொமாட்டோ, ஸ்விஃக்கி தான். இந்த இரு நிறுவனங்களுக்கு எதிராக ஹரித்வார் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார், புனித தலம் என்பதால் அங்கு அசைவ உணவு விற்பதற்கு நகராட்சியிடம் உரிய அனுமதி பெற வேண்டும். ஆனால் அனுமதி ஏதும் இல்லாமல், ஸொமாட்டோ, ஸ்விஃக்கி போன்ற நிறுவனங்கள், அசைவ உணவுகளை விநியோகம் செய்ததாகப் புகார் எழுந்தது.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய போது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உரிமம் மற்றும் தடையில்லாச் சான்றை காட்ட அந்நிறுவனங்கள் தவறி விட்டதாக உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே 7 நாளில் பதில் அளிக்கும்படி அந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

 

Trending News