புதிய ஓய்வூதியத் திட்டதை ரத்துசெய்ய கோரி JACTTO-GEO பேரணி!

புதிய ஓய்வூதியத் திட்டதை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலிறுத்தியும் தமிழகம் முழுவதும் JACTTO - GEO அமைப்பினர் பேரணி

Last Updated : Mar 24, 2018, 04:31 PM IST
புதிய ஓய்வூதியத் திட்டதை ரத்துசெய்ய கோரி JACTTO-GEO பேரணி! title=

ஏழாவது ஊதியக்குழு முரண்பாடுகளைக் களைய வேண்டும் எனவும், புதிய ஓய்வூதியத் திட்டதை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலிறுத்தியும் தமிழகம் முழுவதும் JACTTO - GEO அமைப்பினர் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்!

இந்நிலையில் இன்று தேனி பங்களாமேடு பகுதியிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை சுமார் 300-க்கும் மேற்பட்ட JACTTO - GEO அமைப்பினர் பேரணியாகச் சென்றனர். பேரணியின் போது தங்களது கோரிக்கைகளை வலிறுத்தி முழக்கங்களை எழுப்பியபடி சென்றனர்.

இதேப்போல் தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பேரணியை தொடங்கிய JACTTO - GEO அமைப்பினர், எஸ்வி ரோடு, நகராட்சி அலுவலகம் வழியாக தொலைபேசி நிலையம் வரை வந்து கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் கோட்டை மைதானத்தில் இருந்து பேரணியாகப் புறப்பட்ட JACTTO - GEO அமைப்பினர், நாட்டாண்மைக் கழக கட்டிடம் வரை வந்து அங்கு முழக்கங்களை எழுப்பினர்.

கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட JACTTO - GEO அமைப்பினர் முழக்கங்களை எழுப்பியபடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Trending News