கர்நாடக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் நிலையில், மாநிலத்தின் பெல்கம் பகுதியில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 101 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!
நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 12-ஆம் நாள் நடைபெறவுள்ளது. இதனையடுத்து வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் பல யுக்திகளை கையாண்டு வருகிறது.
ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முதல்வர் தலமையிலான காங்கிரஸ் கட்சியும், அவர்களிடன் இருந்து ஆட்சியை கைப்பற்ற பாஜகத-வும் பனிப்போர் நடத்தி வருகின்றன. அதே வேலையில் தேர்தலில் வெற்றிப் பெற அறிவிக்கப்பட இருக்கும் வேட்பாளர்களும் தங்கள் தரப்பிற்கு மக்கள் மனதில் இடம்பிடிக்க பல விஷயங்களை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெல்கம் மாவட்டத்தின் கானகும்பி பகுதியில் 101 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 36 லிட்டர் பியர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் எதிர்நோக்கி வரும் நிலையில் இந்த மதுபானங்கள் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கு சட்டவிரோதமாக கடத்தப் பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்களிடன் இருந்து 3 மோட்டார் சைக்கில் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது!
Karnataka: Police seized 65 litres of liquor, 36 litres of beer, 3 motor-bikes and arrested 5 people at Kanakumbi check-post in Belgaum district. pic.twitter.com/I2H00cxjx3
— ANI (@ANI) April 8, 2018
கர்நாடகா தேர்தல் 2018...
- வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் - ஏப்ரல் 17
- வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் - ஏப்ரல் 24
- கர்நாடக தேர்தல் - மே 12, 2018
- வாக்கு எண்ணிக்கை - மே 15, 2018
- 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.