குஜராத்தில் தடை செய்யப்பட்ட PUBG கேம் விளையாடிய 19 பேர் கைது!

குஜராத் ராஜ்கோட்டில் தடை செய்யப்பட்ட PUBG கேம் விளையாடியதாக 19 இளைஞர்களை லாவல்துரையினர் கைது செய்துள்ளனர்!!

Last Updated : Mar 15, 2019, 10:49 AM IST
குஜராத்தில் தடை செய்யப்பட்ட PUBG கேம் விளையாடிய 19 பேர் கைது! title=

குஜராத் ராஜ்கோட்டில் தடை செய்யப்பட்ட PUBG கேம் விளையாடியதாக 19 இளைஞர்களை லாவல்துரையினர் கைது செய்துள்ளனர்!!

இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் தற்போது ஸ்மார்ட் போன் யுகத்தில் பயணித்து வருகிறது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகமான பப்ஜி (PUBG -playerUnknown's Battlegrounds, popularly) விளையாட்டு இளைஞர்கள் குழந்தைகள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தற்போது, வரவேற்பு என்பதைக் கடந்து பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், இது தொடர்பான செய்தியை நாம் தினமும் பார்க்கிறோம். ஓய்வில்லாமல் PUBG விளையாடிய மாணவர் மனநல பாதிப்பு. PUBG-ல் முழு நேரத்தையும் செலவிடும் மாணவர்கள் என தினமும் ஒரு செய்தி வருகிறது. 

இந்நிலையில், குஜராத் மாநில அரசு PUBG விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளதா என்பதை மாவட்ட நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டுமென சுற்றறிக்கை விடுத்தது. முன்னதாக நாடு முழுவதும் PUBG விளையாட்டை தடை செய்ய வேண்டும் எனக் குஜராத் மாநில குழந்தைகள் நல ஆணையம் வலியுறுத்தியது. அதன்படி ராஜ்கோட்டில் மார்ச் 9 முதல் முதல் ஏப்ரல் 30 வரை PUBG விளையாட்டு தடை செய்யப்படுவதாகவும், யாரேனும் PUBG விளையாட்டு குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் சட்ட விதி 188ன் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

அதன்படி கடந்த இரண்டு நாட்களில் PUBG விளையாடியதாக 6 கல்லூரி மாணவர்கள் உட்பட 19 பேரை ராஜ்கோட் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமின் பெற்று பின்னர் விடுதலை ஆனார்கள். PUBG குறித்து பேசிய மனநல மருத்துவர் த்ருவ், பப்ஜி விளையாட்டு நம் மனதை அடிமைப்படுத்தக்கூடிய விளையாட்டு. போலீசாரின் அறிவுறுத்தல் தான் இந்த விளையாட்டு போதையில் இருந்து வெளிவர உதவும் என தெரிவித்துள்ளார். 

 

Trending News