மிஸ் டீன் இன்டர்நேஷனல்: இந்தியாவை சேர்ந்த ஆயுஷி தோலாகியா மகுடம்

டீன் ஏஜ் பெண்களுக்கான சர்வதேச அழகி போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஆயுஷி தோலாகியா மகுடம் சூடினார்.

Last Updated : Dec 31, 2019, 04:04 PM IST
மிஸ் டீன் இன்டர்நேஷனல்: இந்தியாவை சேர்ந்த ஆயுஷி தோலாகியா மகுடம் title=

டீன் ஏஜ் பெண்களுக்கான சர்வதேச அழகி போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஆயுஷி தோலாகியா மகுடம் சூடினார்.

மிஸ் டீன் இன்டர்நேஷனல் என்பது 14 முதல் 19 வயதுக்குட்பட்ட உலகெங்கிலும் உள்ள டீன் ஏஜ் சிறுமிகளுக்காக இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் அழகுப் போட்டி ஆகும். இந்த போட்டியை இந்திய தொழிலதிபர், கிளமானந்த் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான நிகில் ஆனந்த் சொந்தமாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் பங்கேற்ற 22 நாடுகளை சேர்ந்த பெண்களை பின்னுக்கு தள்ளி குஜராத்தை சேர்ந்த ஆயுஷி தோலாகியா பட்டம் வென்றார்.  டீன் ஏஜ் பெண்களுக்கான சர்வதேச அழகியாக தேர்வானா ஆயுஷி, இந்தியாவின் சார்பாக மகுடம் சூடியது மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக தெரிவித்தார்.

கடந்த 27 ஆண்டுகளில் மிஸ் டீன் ஏஜ் சர்வதேச அழகி பட்டத்தை வென்ற முதல் ஆசியப்பெண் என்ற பெருமையையும் ஆயுஷி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News