தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு - எப்பொழுது வாங்கலாம்..!!

இந்த காலகட்டத்தில் திருமண நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடைபெற இருப்பதால், தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 12, 2018, 06:10 PM IST
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு - எப்பொழுது வாங்கலாம்..!! title=

தமிழகத்தில் தீபாவளி முதல் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்ப்பட்டு உள்ளது. சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.

தமிழகத்தில் 22 கேரட் தங்கத்தின் விலை கடந்த மாதம் பார்த்தால் ரூ 29,290 தொடங்கி மாதம் கடைசி நாளில் ரூ. 30,360 வரை உயர்ந்தது. அதேபோல 24 கேரட் தங்கத்தின் விலை கடந்த மாதம் பார்த்தால் ரூ 30,490 தொடங்கி மாதம் கடைசி நாளில் ரூ. 31,640 வரை உயர்ந்தது. கடந்த மாதத்தில் வழக்கத்தை விட சுமார் 3 சதவீதம் உயர்ந்தது.

இந்த மாதத்தில் (நவம்பர்) 22 கேரட் தங்கத்தின் விலை ரூ 30,310 தொடங்கி இன்று ரூ 29,910 வரை விற்கப்படுகிறது. அதேபோல 24 கேரட் தங்கத்தின் விலை ரூ 31,600 தொடங்கி இன்று ரூ 31,400 வரை விற்கப்படுகிறது. கடந்த பத்து நாட்களில் அதிகபட்சமாக நவம்பர் 3 ஆம் தேதி 22 கேரட் ரூ. 30,390, 24 கேரட் ரூ. 30,700-க்கு விற்கப்பட்டது. 

தீபாவளியை ஒப்பிடும்போது இன்றைய தங்கத்தின் விலை குறைவானது. வெள்ளியை பொருத்த வரை அதிக அளவில் மாற்றம் எதுவும் இல்லை. தற்போது திருமண நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடைபெற இருப்பதால், தங்கத்தின் விலை தொடர்ந்து அதிக்கரிக்க வாய்ப்பு உள்ளது.

Trending News