ஏமாற்றிய அமேசான்!! ரஜினியின் கதாநாயகிக்கு நேர்ந்த கொடுமை!!

அமேசானில் ஹெட்போன் ஆர்டர் செய்த பாலிவுட்டின் முன்னணி நடிகையான சோனாக்‌ஷி சின்ஹாவிக்கு ஏமாற்றம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 13, 2018, 05:46 PM IST
ஏமாற்றிய அமேசான்!! ரஜினியின் கதாநாயகிக்கு நேர்ந்த கொடுமை!! title=

சமீபகாலமாக ஆன்லைன் மோசடிகள் நடப்பதும் அதிகரித்து வருகின்றன. பாலிவுட்டின் முன்னணி நடிகையான சோனாக்‌ஷி சின்ஹா ரூ. 18 ஆயிரத்திற்கு அமேசான் நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் இவருக்கு அமேசான் தரப்பில் இருந்து பழைய துருபிடித்த இரும்புத் துண்டுகள்அனுப்பப்பட்டுள்ளது.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த சோனாக்ஷி சின்ஹா, தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை, புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவிட்டு கேள்வி எழுப்பி உள்ளார். அதில், 

"ஏ அமேசான்! நான் ஆர்டர் செய்த போஸ் ஹெட்போனுக்கு பதில் எனக்கு கிடைத்துள்ளதை பாருங்கள். அருமையான பாக்கிங்கை திறந்தால் அதிர்ச்சி அடைந்தேன். உங்களுடைய வாடிக்கையாளர் சேவை மையம் எந்த உதவியும் செய்யவில்லை. இது மிகவும் மோசம்" என பதிவிட்டு உள்ளார். 

 

மேலும் "யாருக்காவது ரூ.18 ஆயிரத்திற்கு பளபளக்கும் குப்பை வேண்டுமா? கவலைப்பட வேண்டாம், இதை நான் விற்கிறேன். அமேசான் இல்லை. அதனால் உங்களுக்கு என்ன வேண்டுமோ, அது மட்டும் கிடைக்கும்" என்று நக்கலாக பதிவிட்டு உள்ளார் நடிகை சோனாக்ஷி சின்ஹா.

 

இதனை கண்ட அமேசான் நிறுவனம் தவறுக்கு மன்னிக்கவும், உடனடியாக உங்கள் பிரச்சனை சரிசெய்யப்படும் என பதில் அளித்து உள்ளது.

 

சோனாக்ஷி இந்த பதிவை பகிர்ந்து கொண்டதில் இருந்து, இதுவரை கிட்டத்தட்ட 9000-க்கு மேற்ப்பட்டோர் லைக் செய்துள்ளனர். 1500-க்கும் மேற்பட்டவர்கள் ரீ-ட்வீட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News