சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் விவசாயி ஒருவரின் செம்மறி ஆட்டில் இருந்து சுமார் 30kg உள்ளன் பெறப்பட்டுள்ளாது!
கிழக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள விவசாயி கிராமி பௌடன். இவர் செம்மறி ஆட்டுப் பன்னை வைத்து வருகின்றார். இவரது தொழுவத்தில் இருக்கும் செம்மறி ஆட்டின் உடலில் இருந்த கடந்த சில வருடங்களாக ரோமங்களை எடுக்காமலேயே விட்டுவிட்டார்.
நெடுநாட்களுக்கு பிறகு தற்போது இந்த ஆட்டின் ரோமங்களை பௌடன் தற்போது நீக்கியுள்ளார். இதன்மூலம் ஒரே ஆட்டின் உடலில் இருந்து சுமார் 30Kg ரோமங்களை பெற்றுள்ளார்.
இந்த நிகழ்வின் புகைப்படங்களை தற்போது அவர் சமூக வலைதளத்தின் வாயிலாக பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது... ஒரே ஆட்டில் அதிக ரோமங்களை பெற்ற ஆடு என்னும் பட்டியலில் உலக அளவில் இந்த ஆடு 3-ஆம் இடம் பிடித்துள்ளது என பௌடன் குறிப்பிட்டுள்ளார்.
தனது பதிவில் பிரபல கார்டூன் கதாப்பாத்திரமான ‘செரிக் 2’ என்னும் பெயரினை தனது ஆட்டிற்கு வைத்திருக்கும் பௌடன், தனது ஆட்டின் ரோமங்களை விற்று சுமார் $2000 டாலர் பணம் ஈட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போது தன் ஆட்டில் இருந்து பெறப்பட்டுள்ள உள்ளன் ஆனது வழக்கமான எடுக்கப்படும் உள்ளன் அளவுகளை காட்டிலும் 6 மடங்கு அதிகம் என தெரிவித்துள்ளார்.