லட்சுமி விலாஸ் வங்கி விரைவில் DBS பேங்க் இந்தியா லிமிடெட் (DBIL) உடன் இணைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இதன் காரணமாக, IFSC மற்றும் MICR குறியீடு மாறுகின்றன. புதிய விதிகளும் நாளை முதல் பிப்ரவரி 28 முதல் அமல்படுத்தப்படும்.
பழைய காசோலை புத்தகம் வேலை செல்லாது
அரசாங்கத்தின் முடிவிற்குப் பிறகு வங்கிகள் இணைக்கப்படும் நிலையில், லட்சுமி விலாஸ் வங்கியின் ஐஎஃப்எஸ்சி குறியீடு பிப்ரவரி 28 முதல் மாறும். இதனால் இந்த வங்கியின் பழைய காசோலை புத்தகம் மார்ச் மாதம் இயங்காது. DBS வங்கி இந்தியா லிமிடெட் உடன் இணைந்த பிறகு, லட்சுமி விலாஸ் வங்கி (LVB) எனப்படும் வங்கியின் அனைத்து கிளைகளின் IFSC மற்றும் MICR குறியீடு மாற்றப்பட்டது. அனைத்து பழைய IFSC குறியீடுகளும் பிப்ரவரி 28, 2022 முதல் மாறும்
புதுப்பிக்கப்பட்ட IFSC குறியீட்டை அறிந்து கொள்ளும் முறை
பிப்ரவரி 28 க்கு முன் மூன்றாம் நபர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து காசோலைகளும் புதிய காசோலைகளுடன் மாற்றப்பட வேண்டும் என்று வங்கி கூறியுள்ளது. பிப்ரவரி 28க்குப் பிறகு பழைய MICR குறியீட்டைக் கொண்ட எந்தவொரு காசோலையும் ஏற்றுக்கொள்ளப்படாது. அத்தகைய சூழ்நிலையில், மார்ச் 1 முதல், வாடிக்கையாளர்களுக்கு NEFT / RTGS / IMPS மூலம் பணப் பரிமாற்றத்திற்கு புதிய DBS IFSC குறியீடு தேவைப்படும்.
மேலும் படிக்க | எச்சரிக்கை! உங்கள் பேஸ்புக், கூகுள் கணக்குகள் ஹேக் செய்யப்படலாம்; தவிர்ப்பது எப்படி!
புதிய IFSC குறியீடுகள் மற்றும் MICR குறியீடுகளின் முழுமையான பட்டியலை www.lvbank.com/view-new-ifsc-details.aspx என்ற வலைதளத்தில் பார்க்கலாம் என்று வங்கி கூறியுள்ளது. 94 ஆண்டு பழமையான லக்ஷ்மி விலாஸ் வங்கி, சிங்கப்பூர் DBS வங்கியின் இந்தியக் கிளையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு நவம்பர் 27, 2020 முதல் அமலுக்கு வந்துள்ளது.
மேலும் படிக்கலாம் | Flipkart Sale: ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள இந்த லேப்டாப் வெறும் ரூ.15 ஆயிரத்துக்கு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR