பேய் வேடமிட்டு சாலையில் செல்லும் மக்களை பயமுறுத்திய 7 பேர் கைது!

யூடியூப் பிராங் விடியோவுக்காக பேய் வேடமிட்டு பாதசாரிகளை அச்சுறுத்திய 7 பெங்களூர் மாணவர்கள் கைது!

Last Updated : Nov 13, 2019, 03:39 PM IST
பேய் வேடமிட்டு சாலையில் செல்லும் மக்களை பயமுறுத்திய 7 பேர் கைது! title=

யூடியூப் பிராங் விடியோவுக்காக பேய் வேடமிட்டு பாதசாரிகளை அச்சுறுத்திய 7 பெங்களூர் மாணவர்கள் கைது!

டெல்லி: வைரல் 'பேய் பிராங்' (ghost prank) பற்றி இதுவரை கேள்விப்பட்டீர்களா?.. இது இப்போது இணையம் முழுவதும் வைரளாகி வருகிறது. இந்நிலையில், ஏழு மபர்களை கொண்ட யூ-டியூபர் குழு ஒன்றை நேற்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த பிரன்க் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது. 

'குக்கி பீடியா' என்ற யூடியூப் சேனலின் படைப்பாளர்களான இந்த மாணவர்கள், வெள்ளை உடையில் பேய்களாக உடையணிந்து பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளைப் பயமுறுத்தி தடுத்து நிறுத்தி அப்பகுதியில் விடியோ எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். ‘கைது செய்யப்பட்ட இளைஞர்கள் ஆர்.டி.நகர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு கல்லூரிகளைச் சேர்ந்தவர்களான இவர்கள் பாதசாரிகளையும் வாகன ஓட்டிகளையும் வெள்ளை உடையில் பேய்களைப் போல வேடமிட்டு பயமுறுத்தும் வகையில் சாலையில் நின்றனர்.  அத்துடன் அவர்களில் ஒருவர் இறந்தவர் போல நடிக்க.. சுற்றி நின்று கொண்டு பிறர் பேய்களைப் போல சத்தமிட்டும் நடித்தும் பாதசாரிகளை அச்சுறுத்திக் கொண்டிருந்தனர்.

இதையடுத்து திங்கள்கிழமை அதிகாலை 2 மணியளவில் அப்படியான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் மீது "பொது மக்களுக்குத் தொல்லைகளை உருவாக்கி பயமுறுத்துகிறார்கள்" என உள்ளூர்வாசிகள் புகார் அளித்ததை அடுத்து இந்த கைதுகள் நடந்ததாக காவல்துறை தெரிவித்தது. கைது செய்யப்பட்டபோது, ​​மாணவர்கள் தங்களது நகைச்சுவை விளையாட்டை ஒப்புக்கொண்டனர். அவர்கள் செய்த செயலுக்கு மன்னிப்பு கோரிய பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். கைதான மாணவர்கள் ஷான் மாலிக், நவீத், சாகிப், சையத் நபில், யூசிப் அகமது, சஜில் முகமது, முகமது அயூப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், இந்திய தண்டனைச் சட்டம் 503 (குற்றவியல் மிரட்டல்), 268 (பொதுத் தொல்லை), மற்றும் 141 (சட்டவிரோத சட்டசபை) ஆகியவற்றின் கீழ் அந்த மாணவர்களின் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

 

Trending News