மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: இனி இந்த வசதி கிடையாது

கோவிட் தொற்றுநோய் காலத்தில், அரசு ஊழியர்களுக்கு நீண்ட காலமாக வழங்கப்பட்டு வந்த அனைத்து வசதிகளும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 9, 2021, 03:30 PM IST
  • அரசு ஊழியர்களுக்கான ஒரு முக்கியமான செய்தி.
  • அரசு ஊழியர்களுக்கு நீண்ட காலமாக வழங்கப்பட்டு வந்த சில வசதிகள் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன.
  • இதற்கான முழுமையான வழிகாட்டுதலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: இனி இந்த வசதி கிடையாது title=

Covid Guidelines: அரசு ஊழியர்களுக்கான ஒரு முக்கியமான செய்தி இது. கோவிட் தொற்றுநோய் காலத்தில், அரசு ஊழியர்களுக்கு நீண்ட காலமாக வழங்கப்பட்டு வந்த அனைத்து வசதிகளும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த சலுகைகள் அனைத்தும் நவம்பர் 8, 2021 இலிருந்து முடிவடைந்துவிட்டன.

அதாவது, தற்போது மீண்டும் முன்பு போல் அரசு ஊழியர்கள் முழு நேர வருகைப் பதிவை அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். வருகைப் பதிவுக்கான பயோமெட்ரிக் வருகை முறை (Biometric Attendance) திங்கட்கிழமை முதல் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அரசு உத்தரவு பிறப்பித்தது

பயோமெட்ரிக் வருகை குறித்து அனைத்து மத்திய அலுவலகங்களிலும் (Government Offices) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அரசின் துணைச் செயலாளர் உமேஷ் குமார் பாட்டியா கூறுகையில், 'கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, அலுவலகங்களில் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை அழைப்பது மற்றும் வேலை நேரத்தைக் குறைப்பது என வழங்கப்பட்டிருந்த சலுகைகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. இனி நவம்பர் 8-ம் தேதி முதல் அனைத்து பணியாளரும் பயோமெட்ரிக் வருகை பதிவு செய்ய வேண்டும்.’ என்றார்.

அரசு உத்தரவில் என்ன இருக்கிறது?

- இதற்கான முழுமையான வழிகாட்டுதலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

- அரசு வழிகாட்டுதலின்படி, பயோமெட்ரிக் இயந்திரத்திற்கு அருகில் சானிடைசர் வைத்திருப்பது கட்டாயமாக்கப்படும்.

- வருகையை பதிவு செய்வதற்கு முன்னும் பின்னும் அனைத்து ஊழியர்களும் தங்கள் கைகளை சுத்தப்படுத்த வேண்டும்.

- பயோமெட்ரிக் வருகை பதிவு செய்யும் போது பணியாளர்கள் தங்களுக்குள் ஆறு அடி இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

ALSO READ:7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மேலும் ஒரு அலவன்ஸ் சேரும்!

- அனைத்து ஊழியர்களும் எப்போதும் முகக்கவசம் அணிய வேண்டும்.

- பயோமெட்ரிக் இயந்திரத்தின் டச்பேடை அடிக்கடி சுத்தம் செய்ய பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

- இந்த ஊழியர்கள் (Central Government Employees) தங்கள் வருகையை பதிவு செய்ய வரும் ஊழியர்களிடம் கோவிட் வழிகாட்டுதல்களை எடுத்துக்கூற வேண்டும்.

- பயோமெட்ரிக் இயந்திரத்தை திறந்த வெளியில் வைக்க வேண்டும்.

- இயந்திரம் உள்ளே இருந்தால், போதுமான காற்றோட்டம் இருக்க வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3% உயர்த்தப்பட்டுள்ளதோடு, ஜூலை மாதத்திற்கான போனஸும் வழங்கப்பட்டுள்ளது. ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, இப்போது மத்திய ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் டிஏ 31 சதவீதமாக அதிகரித்துள்ளது. உயர்த்தப்பட்ட கொடுப்பனவு ஜூலை 1, 2021 முதல் அமலுக்கு வந்தது.

ALSO READ:7th Pay Commission: உயர்த்தப்பட்டது குடும்ப ஓய்வூதியத்தின் வரம்பு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News