இணையத்தை கலக்கும் புதிய சிகை அலங்காரத்துடன் ஃப்ரீக் ஆனா BJP தலைவர்கள்...

இணையத்தில் வைரலாகும் புதிய சிகை அலங்காரத்துடன் ஃப்ரீக் ஆனா BJP தலைவர்களின் புகைப்படம்!!

Updated: Apr 23, 2019, 05:05 PM IST
இணையத்தை கலக்கும் புதிய சிகை அலங்காரத்துடன் ஃப்ரீக் ஆனா BJP தலைவர்கள்...

இணையத்தில் வைரலாகும் புதிய சிகை அலங்காரத்துடன் ஃப்ரீக் ஆனா BJP தலைவர்களின் புகைப்படம்!!

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைப்டேறு வருகிறது. இந்நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பிரச்சாரம் ஒரு புறம் நடந்தாலும், மக்களை மகிழ்விக்க மீம் கிரிஎட்டர்கள் பல மீம்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது புதிய சிகை அலங்காரத்துடன் ஃப்ரீக் ஆனா BJP தலைவர்களின் புகைப்படம் வைரலாகி வருகிறது. 

இந்தியாவில் பிரபல சிகை அலங்கார மற்றும் ஆடை அலங்கார கடைகளின் உரிமையாளரான ஜாவத் ஹபீப். இவர் சமீபத்தில்  பாஜக கட்சியில் இணைந்தார். சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவர் பாஜகவின் தன்னை இணைத்துக்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜாவத் கூறுகையில்;  இத்தனை நாட்கள் நான் தலைமுடிக்கு காவலாளியாக இருந்தேன். இனிமேலிருந்து நான் தேசத்தின் காவலாளி ஆகப்போகிறேன் என்று அவர் தெரிவித்தார். 

இந்நிலையில், பிரபல சிகை அலங்காரர் ஜாவத் ஹபீப் பாஜகவில் இணைந்ததால், இனிமேல் பாஜக தலைவர்களின் ஹேர் ஸ்டைல் எப்படி மாறும் என நெட்டிசன்கள் சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த சித்தரிப்பில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரின் ஹேர் ஸ்டைல்களை மாற்றி எடிட் செய்துள்ளனர்.

மேலும், உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மொட்டையடித்திருப்பதற்கு பதிலாக முடியுடன் இருந்தால், எப்படி இருக்கும் என்பதையும் சித்தரித்துள்ளனர்.