கூகுளில் அரசியல் விளம்பரம் செய்வதில் பாஜக பிடித்த இடம் இதுதான்

கூகுளில் அரசியல் விளம்பரம் செய்வதில் பாஜக முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Last Updated : Apr 4, 2019, 11:23 AM IST
கூகுளில் அரசியல் விளம்பரம் செய்வதில் பாஜக பிடித்த இடம் இதுதான்

கூகுளில் அரசியல் விளம்பரம் செய்வதில் பாஜக முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது அரசியல் கட்சிகள் பெருமளவு விளம்பரத்துக்காக செலவிட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது இணைய விளம்பரங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றன.  

இந்நிலையில் கூகுளில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதிக அளவில் அரசியல் விளம்பரம் செய்து வருகின்றன. கடந்த பிப்ரவரி 19ம் தேதி முதல் தற்போது வரை கூகுளில் அதிக விளம்பரம் செய்ததில், மத்தியில் ஆளும் பாஜக முதல் இடத்தில் உள்ளது. அதேவேளையில், காங்கிரஸ் 6-வது இடத்தில் உள்ளது. 

கூகுளில் அதிக விளம்பரம் செய்த கட்சிகள் பட்டியலில் 2-வது இடத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி உள்ளது. மேலும் 3-வது இடத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் உள்ளது.

More Stories

Trending News