காலையில் சுடு தண்ணீர் குடிப்பதால் எடை குறையுமா?

காலையில் சுடு தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறையும் என்று கூறப்படுகிறது. இது உண்மையா? 

Written by - Yuvashree | Last Updated : Oct 21, 2023, 05:45 PM IST
  • காலையில் எழுந்ததும் சிலர் சுடு தண்ணீர் குடிப்பர்.
  • இதனால் உடல் எடை குறையலாம் என கூறப்படுகிறது.
  • இது உண்மையா?
காலையில் சுடு தண்ணீர் குடிப்பதால் எடை குறையுமா? title=

காலையில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது ஒரு பிரபலமான மற்றும் பயனுள்ள நடைமுறையாக பார்க்கப்படுகிறது. வெதுவெதுப்பான நீரை குடிப்பது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இது செரிமானத்திற்கும் உதவுகிறது. வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பதால் வளர்சிதை மாற்றமும் ஏற்படுகிறது. இது, உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும், நீரேற்றத்தை பராமரிக்கவும் உதவுகிறது. காலையில் சுடு தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறையும் என்றும் கூறப்படுகிறது. 

தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

தண்ணீர் குடிப்பதால் தசை, தோல் போன்ற உடல் உறுப்புகளுக்கு பல நன்மைகள் ஏற்படும். உடலில் ஏற்படும் நோய் தொற்றுகளில் இருந்தும் தன்ணீர் நம்மை பாதுகாக்கிறது. தினமும் 8 கப் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட மருத்துவ ஆராய்ச்சியில், குளிர்ந்த நீரை விட சுடு நீர் குடிப்பது உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. 

எடையை குறைக்க..

உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், தினமும் காலையில் சுடு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.  உடல் எடையை குறைக்க, உடலில் நீர்சத்தினை தக்க வைத்துக்கொள்ள வேண்டியது முக்கியம். தண்ணீர் இயற்கையாகவே உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்கிறது.மேலும், தண்ணீர் நமது உடலில் உள்ள சக்திகளை பாதுகாக்கவும் தேவையில்லாத கிருமிகளை அழிக்கவும் உதவுகிறது. உடலில், உள்ள தேவையில்லாத கழிவு பொருட்கள் மற்றும் கிருமிகளை வெளியேற்றுவதில் சுடு தண்ணீர் உதவுகிறது. ஒருவர், ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனால், உடலின் கழிவுகளும் வெளியேறும் மெட்டபாலிச சத்துக்களையும் அதிகரிக்கிறது.

மேலும் படிக்க | விந்தணுவின் எண்ணிக்கையையும் தரத்தையும் அதிகரிக்கும் ‘சூப்பர்’ பழங்கள்!

தண்ணீர் அருந்துவது, உடல் கிருமிகளை சீக்கிரமாக வெளியேற்ற தண்ணீர் உதவுகிறது. மருத்துவர்கள் பலர், நோய் வாய்ப்பட்டோர் அதிகம் தண்ணீர் குடிப்பதால், விரைவில் அந்த நோய் குணமாகும் என கூறப்படுகிறது. 

சுடு தண்ணீர் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. இதனால், உடலில் தங்கியிருக்கும் கொழுப்புகள் கரையும். இதற்கு தினமும் காலையில் சுடு தண்ணீர் குடிப்பது அவசியமாக கருதப்படுகிறது. சாப்பிடுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதால் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கலாம். சில சமயங்களில், நாம் தாகத்தையும் பசியையும் தவறாக நினைத்துக்கொண்டு அதிகம் சாப்பிடுவதுண்டு. அதனால், சாப்பிடும் முன் சிறிது சுடு தண்ணீர் குடித்து விட்டு சாப்பிடலாம். சாப்பிட்ட உணவில் உள்ள கலோரிகளை குறைக்கவும் சுடு தண்ணீர் உதவுகிறது.

எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும்? 

காலையில் எழுந்தவுடன், எதையும் சாப்பிடுவதற்கு முன், வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதே சிறந்த நேரம். இதை தாமதப்பதால் அதற்குறிய செயல்திறனை குறைய வாய்ப்புள்ளது. வெதுவெதுப்பான நீர் அனைவருக்கும் பரிந்துரைக்கப்பட்டாலும், அதை குடிப்பவர்கள் அவரவரின் உடல் நலனை கருத்தில் கொள்வது அவசியம். சிலர் சற்று சூடான அல்லது குளிர்ந்த நீரை விரும்பலாம். உங்களுக்கு வசதியான மற்றும் உகந்த வெப்பநிலையைக் கண்டுபிடிப்பதே முக்கியமானது. பலர் சுவையை அதிகரிக்க தங்கள் வெதுவெதுப்பான நீரில் சுவைகள், இனிப்புகள் அல்லது எலுமிச்சை சேர்க்கிறார்கள். ஒரு சிறிய எலுமிச்சை நன்மை பயக்கும் என்றாலும், அதிகப்படியான சர்க்கரை அல்லது செயற்கை இனிப்புகளை சேர்ப்பது இதன்ஆரோக்கிய நன்மைகளை கெடுத்து விட வாய்ப்புள்ளது. தேவையற்ற சேர்க்கைகளைச் சேர்ப்பதைத் தவிர்த்து எளிமையான சுடு தண்ணீரை குடிப்பது நல்லது.

மேலும் படிக்க | Osteoporosis: எலும்புகளை சல்லடையாய் துளைக்கும் உணவுகளும் பழக்கங்களும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News