BSNL-ன் இந்த பம்பர் பிளானில் எக்கச்சக்க offers: Miss பண்ணிடாதீங்க

அனைத்து தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மத்தியில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வாய்ப்பை அரசு நிறுவனமான BSNL-ம் விட்டுவிடவில்லை.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 13, 2020, 04:33 PM IST
  • BSNL, வாடிக்கையாளர்களுக்கு புதிய 1999 ரூபாய் பம்பர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • BSNL-ன் இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3 GB இணைய தரவு மற்றும் வரம்பற்ற அழைப்பு வசதி கிடைக்கும்.
  • ரூ. 1999 திட்டத்தில் BSNL வாடிக்கையாளர்களுக்கு EROS Now-ன் இலவச சந்தாவை வழங்குகிறது.
BSNL-ன் இந்த பம்பர் பிளானில் எக்கச்சக்க offers: Miss பண்ணிடாதீங்க title=

பண்டிகை காலத்தில் அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) ஒரு பம்பர் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அனைத்து தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மத்தியில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வாய்ப்பை அரசு நிறுவனமான BSNL-ம் விட்டுவிடவில்லை.

BSNL-ன் இந்த ஆஃபரில் கிடைக்கும் பல நன்மைகள்

BSNL-ன் இந்த திட்டம் பல வகைகளில் வாடிக்கையாளர்களுக்கு நன்மை பயக்கும். தீபாவளி நேரத்தில் வந்துள்ள இந்த சிறப்பு திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல கவர்ச்சிகரமான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

1999 ரூபாய் திட்டம்

BSNL, வாடிக்கையாளர்களுக்கு புதிய 1999 ரூபாய் பம்பர் திட்டத்தை (Bumber Plan) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் பல விதங்களில் வாடிக்கையாளர்களுக்கு நன்மை பயக்கும். 1999 ரூபாய்க்கான இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இரண்டு மாதங்களுக்கு இலவச அழைப்பு மற்றும் இணைய வசதி கிடைக்கும்

BSNL-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, 1999 ரூபாய் திட்டத்தில், வாடிக்கையாளர்கள் 365 க்கு பதிலாக 425 நாட்கள் செல்லுபடியைப் பெறுகின்றனர். அதாவது இவை இன்னும் இரண்டு மாதங்கள் செல்லுபடியாகும். வாடிக்கையாளர்கள் இரண்டு மாதங்களில் கூடுதல் கட்டணம் இல்லாமல் இலவச அழைப்பு மற்றும் இணைய வசதியை அனுபவிக்க முடியும்.

ALSO READ: Vi-ன் Rs.99 ரீசார்ஜ் பிளான் இனி அனைத்து வட்டங்களில் கிடைக்கும்: இதன் நன்மைகள் என்ன தெரியுமா

தினசரி 3 ஜிபி தரவைப் பெறுவீர்கள்

BSNL-ன் இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3 GB இணைய தரவு மற்றும் வரம்பற்ற அழைப்பு வசதி கிடைக்கும். பயனர்கள் வேகத்திற்கு கூடுதல் பணம் செலுத்த தேவையில்லை.

EROS-க்கு இலவச சந்தா

ரூ. 1999 திட்டத்தில் BSNL வாடிக்கையாளர்களுக்கு EROS Now-ன் இலவச சந்தாவை வழங்குகிறது. அதாவது, ஈரோஸின் இந்த தளத்தில் திரைப்படங்கள், பாடல்கள் மற்றும் தொடர்களையும் வாடிக்கையாளர்கள் பார்த்து ரசிக்க முடியும். இருப்பினும், இந்த சந்தா இரண்டு மாதங்களுக்கு மட்டுமே என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

ALSO READ: ICICI வங்கியின் இந்த offer மூலம் 30 mins-ல் magic, மளிகைக் கடை online store ஆகும்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News