7th Pay Commission: மத்திய ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ், சம்பளம் உயரும் நிச்சயம்

7th Pay Commission latest news: புதிய ஆண்டு ஆரம்பித்துள்ள நிலையில் மத்திய ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 17, 2022, 12:55 PM IST
  • மத்திய ஊழியர்களின் சம்பளம் உயரும்
  • அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கும்
  • AICPI இன் டிசம்பர் தரவு காத்திருக்கிறது
7th Pay Commission: மத்திய ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ், சம்பளம் உயரும் நிச்சயம் title=

புதுடெல்லி: 7th Pay Commission latest news: மத்திய ஊழியர்களுக்கு இந்த மாதம் மீண்டும் நல்ல செய்தி கிடைக்கும். 2022 ஜனவரியில் அகவிலைப்படி (Dearness allowance) மீண்டும் ஒருமுறை அதிகரிக்கப் போகிறது. அதாவது, ஊழியர்களின் சம்பளம் (Central government employee's salary) மீண்டும் உயரும். 2021 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் DA நிலுவையில் வைக்கும் நிலை ஏற்பட்டது. மறுபுறம், ஏறக்குறைய மூன்று வருடங்களாக Fitment Factor தொடர்பான மத்திய ஊழியர்களின் கோரிக்கையின் மீதும் மத்திய அரசின் முடிவு வரலாம்.

ஊழியர்களின் சம்பளம் உயரும்
மத்திய ஊழியர்களின் (7th Pay Commission) Fitment Factor அதிகரித்தால், அவர்களின் அடிப்படை சம்பளம் பெரிய அளவில் உயரும். Fitment Factor 2.57 முதல் 3.68 வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மறுபுறம், அகவிலைப்படி உயர்வு (DA Hike) முடிவு செய்யப்பட்டுள்ளது. உண்மையில், அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) நவம்பர் தரவு வந்துவிட்டது. AICPI குறியீட்டின் இந்தத் தரவுகளின்படி, இது 2 முதல் 3% வரை DA அதிகரிக்கும் (Dearness allowance) என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில நாட்களில், டிசம்பரின் புள்ளிவிவரங்களும் வரும், அதன் பிறகு, டிஏ எவ்வளவு அதிகரிக்கும் என்பது தெளிவாகத் தெரியும்.

ALSO READ | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தில் அதிரடி உயர்வு 

மத்திய ஊழியர்களுக்கு தற்போது 31 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இந்த மாதம் டிஏவில் 2% முதல் 3% வரை அதிகரித்தால் (DA Hike) ஊழியர்களுக்கு 33 முதல் 34 சதவீதம் டிஏ கிடைக்கத் தொடங்கும். அதாவது, மீண்டும் ஒரு முறை ஊழியரின் சம்பளம் அதிகரிக்கும்.

DA Calculator from July 2021
மாதம்                        எண்கள்   DA சதவீதம்
ஜூலை 2021                   353          31.81%
ஆகஸ்ட் 2021                  354          32.33%
செப்டம்பர் 2021            355          32.81%
நவம்பர் 2021                 362.016    34% (ஏறக்குறிய)
டிசம்பர் 2021    

DA மதிப்பெண்கள் கணக்கீடு
ஜூலைக்கான கணக்கீடு- 122.8X 2.88 = 353.664
ஆகஸ்டுக்கான மொத்தம்- 123X 2.88 = 354.24
செப்டம்பர் மாதத்திற்கான கணக்கீடு- 123.3X 2.88 = 355.104
நவம்பர் மாதத்திற்கான கணக்கீடு - 125.7X 2.88= 362.016

34% DA இல் கணக்கீடு
அகவிலைப்படியை 3% அதிகரித்த பிறகு, மொத்த DA 34% ஆக இருக்கும். இப்போது ரூ.18,000 அடிப்படை சம்பளத்தில், மொத்த ஆண்டு அகவிலைப்படி ரூ.73,440 ஆக இருக்கும். ஆனால் வித்தியாசத்தைப் பற்றி பேசினால், சம்பளத்தில் ஆண்டு அதிகரிப்பு ரூ.6,480 ஆக இருக்கும்.

குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
1. அடிப்படை சம்பளம்                                                            18,000 ரூபாய்
2. புதிய அகவிலைப்படி (34%)                                                6120 ரூபாய்/மாதம்
3. அகவிலைப்படி இதுவரை (31%)                                        5580 ரூபாய்/மாதம்
4. எவ்வளவு அகவிலைப்படி அதிகரித்தது                        6120- 5580 = 540 ரூபாய்/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு                                                       540X12= 6,480 ரூபாய்

அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
1. அடிப்படை சம்பளம்                                                          56900 ரூபாய்
2.புதிய அகவிலைப்படி (34%)                                              19346 ரூபாய்/மாதம்
3. அகவிலைப்படி இதுவரை (31%)                                     17639 ரூபாய்/மாதம்
4. எவ்வளவு அகவிலைப்படி அதிகரித்தது                      19346-17639= 1,707 ரூபாய்/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு                                                      1,707 X12= 20,484 ரூபாய்

ALSO READ | 7th Pay Commission முக்கிய அப்டேட்: ரூ. 1,44,200 வரை அரியர் தொகை கிடைக்கும், விவரம் இதோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News