Coronavirus Alert சிக்கன், முட்டை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவுமா? முழுமையான விவரம்

சிக்கன், முட்டை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவுமா? உண்மை என்ன? முழுமையான விவரம் கீழே...

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 4, 2020, 10:08 PM IST
Coronavirus Alert சிக்கன், முட்டை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவுமா? முழுமையான விவரம் title=

புது டெல்லி: கொரோனா வைரஸின் (Coronavirus) தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மக்கள் பல கேள்விகளை மனதில் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக அசைவ உணவு உண்பவர்களின் மனதில் தான் பல சந்தேகம் உள்ளது. உண்மையில், கொரோனா வைரஸின் தொற்று அதிகரித்து வருவதைப் பார்த்து மக்கள் இறைச்சி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் நீண்ட காலமாக சொல்லி வருகின்றனர். சிக்கன் சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவ முடியுமா? என்று கேள்வி சிலருக்கு இருக்கிறது.

இந்திய அரசசின் மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் (Ministry of fisheries animal husbandry and dairying, Govt. of india) சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுகாதார ஆலோசனை தகவல்கள், உங்கள் கேள்விக்கு பதிலளிக்கின்றன. இந்த அறிக்கை பிப்ரவரியில் வெளியிடப்பட்டது. அதைக்குறித்து பார்ப்போம்.

கொரோனா வைரஸ் (Coronavirus) பாதிப்பு அதிகரித்துவரும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, பிப்ரவரி மாதத்திலேயே இந்திய அரசின் மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளர்ப்பு அமைச்சகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டன. நிர்வாகம் வெளியிடப்பட்ட அறிக்கையில் கொரோனா வைரஸ் பற்றி சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சிக்கன் சாப்பிடுவதால் கொரோனா வைரஸை ஏற்படுமா? இல்லையா? என்பது தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

என்னது ரூபாய் நோட்டு மூலம் கொரோனா பரவுமா; 3,000 யுவானை தீயில் கருக்கிய பெண்!!

அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது:
இந்த அறிக்கை 2020 பிப்ரவரி 10 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி, "ஆபிஸ் இன்டர்நேஷனல் டெஸ் எபிசூட்டீஸ் (Office International des Epizooties) இன் படி, கொரோனா வைரஸ் தொற்று மக்களிடமிருந்து மக்களுக்கு பரவுகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் பொருள் இது ஒரு தொற்று நோய் ஆகும். எந்தவிதமான சிக்கன் சாப்பிடுவதால் பரவுவது இல்லை. இருப்பினும், ஒரு விலங்கின் மாமிசத்தை சாப்பிடுவது மூலம் கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று வருகிறது என அஞ்சப்படுகிறது. ஆனால் தற்போது வரை, இது குறித்து எந்த அறிக்கையும் வெளிவரவில்லை. 

சிக்கன் (Chicken) அல்லது அது தொடர்பான எந்தவொரு உணவும் காரணமாக வைரஸ் பரவவில்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. சிக்கன் சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவுகிறது என்பதை இதுவரை உலகளவில் எந்த அறிக்கையும் நிரூபிக்கவில்லை.

Viral Video: கை கொடுத்தா கொரொனா வரும்... நீ வணக்கம் வச்சா போதும்..!

கவலைப்பட வேண்டாம்:
இந்த அறிக்கையின் படி, சிக்கன் சாப்பிடுவது பற்றி கவலைப்பட வேண்டாம். ஆனால் முன்னெச்சரிக்கையாக இருப்பது மிக நல்லது, அதேவேளையில் கவனமாக இருக்க வேண்டும். சிக்கன் வாங்கும் இடம், அது தொற்றுநோய்க்கான பகுதியில் உள்ளதா அல்லது அங்கு கொரோனா வைரஸ் (Coronavirus) பாதிப்பு இருக்கிறதா? போன்ற விஷயங்களை தீவிரமாக ஆராய்ந்த பிறகு, சிக்கன் வாங்க செல்லுங்கள். ஏனென்றால் கொஞ்சம் கவனக்குறைவு உங்களை சிக்கலில் சிக்க வைக்கும்.

Trending News