திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் இன்று!

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் நடந்து வருகிறது. 

Last Updated : Apr 1, 2019, 11:32 AM IST
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் இன்று! title=

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் நடந்து வருகிறது. 

திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை இடமாக திகழ்கிறது. இக்கோவில் பஞ்ச பூதங்களுக்கு உரிய கோவில்களில் பூமிக்குரிய கோவிலாகும். திருவாரூரில் பிறந்தாலும், திருவாரூர் என்ற பெயரை சொன்னாலும் முக்தி கிடைக்கும் என்பார்கள்.

ஆழித்தேரோட்ட திருவிழாவை அப்பர் சுவாமிகளே நடத்துவதாக ஐதீகம். தேரின் முன்பகுதியில் கட்டப்படும் 4 குதிரைகள், யாளி உள்ளிட்ட பொம்மைகளுடன் சேர்த்து அலங்கரிக்கப்பட்ட தேரின் மொத்த எடை 300 டன்னாகும். திருவாரூர் தியாகராஜர் கோயிலில், வருடந்தோறும் தேரோட்டம் சீரும் சிறப்புமாக நடைபெறும். மதுரை சித்திரைத் திருவிழா எப்படிப் பிரசித்தமோ, அதேபோல் திருவாரூர்த் தேர்த்திருவிழாவும் வெகு பிரபலம்.

ஆழித்தேர் ஓடுவதை காண்பதை காட்டிலும், தியாகராஜ கோயிலின் நான்கு வீதிகளிலும் திரும்புவதை காண்பதற்கே, அதிக கூட்டம் கூடும். ஏனெனில், அவ்வளவு பிரம்மாண்டமான அந்தத் தேரின் சக்கரங்களை இரும்பு பிளேட்டுகளின் மீது மசையை கொட்டி, இழுத்து திருப்புவதைப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கும்.

Trending News