இனி காண்டம், மாத்திரைக்கு டாட்டா...... மோதிரம் போட்டாலே போதும்!!

இனி குழைந்தை பிறக்காமல் இருக்க காண்டம், மாத்திரை வேண்டாம்... மோதிரம் போட்டாலே போதும்!!

Last Updated : May 11, 2019, 02:12 PM IST
இனி காண்டம், மாத்திரைக்கு டாட்டா...... மோதிரம் போட்டாலே போதும்!! title=

இனி குழைந்தை பிறக்காமல் இருக்க காண்டம், மாத்திரை வேண்டாம்... மோதிரம் போட்டாலே போதும்!!

காலம் காலமாக மனிதன் உடலுறவு கொள்ளும் போது குழந்தை பிறக்காமல் இருக்க காண்டம், கருத்தடை மாத்திரைகள் ஆகியவற்றை பயன்படுத்தி வருவது வழக்கம். உடலுறவின் போது காண்டம், கருத்தடை மாத்திரைகள் 100 சதவீதம் கரு உருவாகுவதை தடுக்காவிட்டாலும் பெரிய அளவில் கருத்தரிக்காமல் இருக்க உதவி செய்யும். ஆனால் இதை பயன்படுத்துவதில் பலருக்கு பல்வேறு சிரமங்கள் உள்ளன. 

இந்நிலையில் ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பெண்களுக்காக கருத்தடை ஹார்மோன்கள் கலந்த கம்மல், மோதிரம், வாட்ச், நெக்லஸ் ஆகிய அணிகலன்களை வடிவமைத்துள்ளனர். அவற்றை அணிந்து கொள்ளவதால் அவை தோல் வழியாக ரத்தத்தில் ஊடுருவி கருத்தரிக்காமல் தடுக்கும். 

அவர்கள் தயாரித்துள்ள நகை ஒரிரு நாட்கள் மட்டுமே ஹார்மோன்களை ரத்தத்தில் சேர்த்து கருத்தடையை செய்யும், அதன் பின் செயல் இழந்துவிடும். தற்போது இதை அதிக நாட்கள் கணக்கில் பயன்பாட்டில் இருக்க செய்ய ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். அது கண்டுபிடிக்கப்பட்டால் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். 

 

Trending News